பாவத்தின் கொடூரமும், நம்முடைய ஜீவனிலிருந்து அதை நீக்க அதற்கான தண்டனையின் கிரயமும் Jeffersonville, Indiana, USA 53-0403 1சகோதரன் டாம் உமக்கு நன்றி. உங்களால் கூடுமானால் அந்த சிறு காரியத்தில், உங்களிடம் இருக்கின்ற எல்லாச் சத்தத்தையும் அதற்குக் கொடுங்கள். இன்றிரவு ஏறக்குறைய என்னால் வரமுடியாதபடி ஆயிற்று. எனக்கு ஃபுளு வந்துவிட்டது. நான் இங்கேயிருப்பேன் என்று வாக்களித்தேன். நான் சகோதரன் நெவிலிடம், சகோதரன் காக்ஸ்-ஐ வரும்படி சொல்லியிருந்தேன். சகோதரன் நெவிலிடம் கூட்டத்தை அவர் நடத்தும்படியாக சொல்லும்படியாக. ஏனென்றால் எனக்கு அவ்வளவு தொண்டை கரகரப்பாக இருக்கிறது. என்னால் ஒரு சிறு சத்தம் கூட போடமுடியவில்லை என்று கூறி அனுப்பியிருந்தேன். அவரே திரும்பி வந்து சகோதரன் பில், நீர் வருவது மேலாக இருக்கும். அது ஒரு நல்ல காரியமாய் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன் என்றார். ஏதாவது ஒருவிதமான முயற்சியை நான் எப்பொழுதும் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். உண்மையிலேயே , உங்களுக்கு பிரசங்கிக்க எனக்கு மிகவும் கரகரப்பாக இருக்கிறது. ஆனால் இங்கே இருக்கின்ற இந்த சிறிய கருவியின் மூலமாக சிறிது நேரம் உங்களிடம் பேசலாம். நான் இந்தியானாவுக்கு வரும்போழுது ஒவ்வொரு முறையும் எனக்குத் தொண்டை கட்டிப் போகின்றது. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் எனக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. இங்கே அவ்வளவு பள்ளத்தாக்காக இருக்கிறது. இங்கே வந்ததும் எனக்கு அது வருகிறது. அதை என்னிலிருந்து தவிர்க்கவும் முடியவில்லை. நான் ஜெபிக்கிறேன். எப்படியிருந்தாலும் அது வருவது போன்றிருக்கிறது. அதனோடு என்ன செய்யவேண்டும் என்று நான் அறிந்தவைகளோடு நான் எப்பொழுதும் மேலானதையே செய்ய முயற்சிக்கிறேன். எனவே அந்தவிதமாகத்தான் நான் எப்பொழுதும் நம்மால் முடிந்த மேலானதும் அதைத்தான் தேவன் எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்ப்பதெல்லாம் அதுதான். 2இப்பொழுது நம்முடைய கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்த, இந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆராதனைகளின் ஊடாக மகத்தான ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொடுப்பாராக. ஆராதனை தொடர்ந்து இன்றிரவு, நாளை இரவும் இருக்கும். சகோதரன் நெவில் அப்படித்தானே! தொடர்ந்து நாளை இரவு வரைக்கும் இருக்கும். நான் இங்கே வந்தாக வேண்டும், பின்னே இங்கிருந்துபோய், லூயிவில்லுள்ள ஒரு மிஷனரி குழுவிற்கு பிரசங்கிக்க வேண்டும். ஒரு மிஷனரி என்ற கூடலில் நான் நினைக்கிறேன், பதினேழு அல்லது இருபது நாடுகள் பிரிதிநிதித்துவம் அழைக்கிறது. நாளை இரவு ஒருசில நிமிஷங்கள் நான் எடுத்துக்கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். ஞாயிற்றுக் கிழமை காலையில் 3அது என்ன! சகோதரனே அங்கேயே உம்முடைய கரத்தை அவர் மேல் வையும். எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய கிருபையானது இன்றிரவு இந்தச் சகோதரன் சொஸ்தப்படுவதன் மூலமாக எங்களுக்கு நீடித்திருக்க வேண்டுமென்று ஜெபிக் கிறோம். இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த மனிதன் இந்த நேரத்தில் மிகவும் சுகவீனமாயிருப்பது போன்று காணப்படுகிறார். உம்முடைய அன்புள்ள பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினால் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்கள் ஒருவருவக்கொருவர், அறிக்கையிட்டு ஒருவருக்கொருவர் ஜெபம் பண்ணுங்கள் என்று கூறியிருக்கிறீர். இந்த நேரத்தில் எங்களுடைய சகோதரனை நீர் சொஸ்தமாக்க வேண்டுமென்று இந்த ஜனங்களோடு இன்றிரவு நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். எங்களுடைய கர்த்தராகிய இயேசுவின் கரத்தின் பிரதிநிதித்துவமாய் எங்கள் சகோதரன் அங்கே நின்று கொண்டு அவர் மேல் கரத்தை வைத்துக் கொண்டிருக்க இப்பொழுது எங்களுடைய சகோதரன் இருக்கின்ற சுகவீனத் திலிருந்து சீக்கிரமாக சுகமடையும்படிக்கு எங்களுடைய ஜெபங்களை ஒன்று சேர்த்து கிறிஸ்துவின் நாமத்தினால் உமக்கு அனுப்புகிறோம், ஆமென். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக சகோதரனே!. நீங்கள் எல்லோரும் அவருக்கு சிறிது காற்றை விடுங்கள். அவர் சற்று நெருக்கப்படிருக்கிறார், ஏன்? அவர் சிறிது நடந்து சற்று வெளியே செல்ல விரும்பினால் நேராக நடந்து போய் கட்டிடத்தின் பின்னாக உமக்கு ஒரு இருக்கையை வைத்துக்கொள்ளுங்கள். அங்கே உமக்குக் காற்று கிடைக்கும். இப்பொழுது நம்முடைய எல்லாத்தொல்லைகளையும் தேவன் அறிந்திருக்கிறார். அவரே நம்முடைய பாரம் தாங்குபவராயிருக்கிறார். 4இப்பொழுது, ஞாயிறு காலையில் 6 மணிக்கு சூரியோதய ஆராதனை நமக்கு உண்டு. ஈஸ்டரின் போது எத்தனை பேர்களுக்கு சூரியோதய ஆராதனை விருப்பமாயி ருக்கிறது. நாங்கள் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், ஆக அதனால் கர்த்தருக்குச் சித்தமாயி ருந்தால் நான் சூரியோதய ஆராதனையை நடத்துவேன். அது காலை 6 மணி முதல் 7 முடிய இருக்கும். அதற்குப் பிறகு காலை ஆகாரத்திற்காக, நீங்கள் வீட்டிற்கு திரும்பி போய் வாருங்கள். 9:30க்கு வழக்கமான ஞாயிறு பள்ளி ஆராதனை இருக்கும். சகோதரன் நெவில் இங்கிருப்பார். ஞாயிறு பள்ளி ஆராதனை முடிந்தவுடன் ஞானஸ்நானம் எடுக்க வேண்டியவர்களுக்கு ஈஸ்டர் காலையில் நான் ஞானஸ்நான ஆராதனையை நடத்துவேன். நீங்கள் இன்னும் முழுக்கு ஞானஸ்நானம் பெறாமலிருந்து பெற்றுக்கொள்ள விரும்பினால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால் இயேசுகிறிஸ்துதேவனுடைய குமாரனாய் இருப்பதினாலான அவருடைய தெய்வத்துவத்தில் விசுவாசம் வைத்து எங்களுடைய ஐக்கியத்தில் உம்முடைய ஸ்தாபனத்தை வைக்க விரும்பினால் ஞானஸ்நானம் ஈஸ்டர் காலையென்று சுமார் 10:30க்கு முழுக்கு ஞானஸ்நானத்திற்கு நீங்கள் இங்கே வருவதில் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். உங்கள் ஆடையைக் கொண்டு வாருங்கள். ஏன்? நிச்சயமாக, எங்களிடத்தில் மேலங்கிகள் உண்டு, விசேஷமாக வித்தியாசமான அளவுகளில் ஸ்திரீகளுக்கு இருக்கின்றன. ஆண்களுக்கு எல்லா அளவுகளிலும் இன்னும் வரவில்லை. ஆனால் ஈஸ்டர் காலையில் உங்களை இங்கே காண்பதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம். 5யாரோ இங்கே இதற்கு முன்பாக இந்த தேசத்தில் ஜீவித்தவர் அல்லது இங்கே எங்கேயோ ஜீவித்தவர், அவருடைய அடக்க ஆராதனை ஞாயிறு பிற்பகல் நடக்க இருக்கிறது. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்னர் சகோதரன் நெவிலுடைய பிரசங்கத்தினால் மனம் மாறினவர்கள் என்று நினைக்கிறேன். பெயர் ஈஸ்ட் என்று நினைக்கிறேன். வேறு ஏதோ அடக்கக் கூட்டத்திலிருந்து என்னைத் தொலைபேசியில் அணுகி நானும் சகோதரன் நெவிலும் நம்மில் சிலருமாக அங்கே வந்து பாட்டுப்பாடி பிற்பகல் இரண்டு மணிக்கு மட்டுமாய் அடக்க வீட்டில் ஆராதனை நடத்துவீர்களா என்று கேட்டுக்கொண்டார்கள். அந்த அம்மாளை எனக்கு ஞாபகமில்லை. ஈஸ்ட், யாஸ்ட் அல்லது ஈஸ்ட் உங்களில் அநேகர் தினசரி பத்திரிக்கையில் இன்றிரவு பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம், எட்னா ஜஸ்டிஸ் என்பதாயிருக்கிறது. இங்கே சில சமயங்களில் வருவார்கள் எட்னா ஜஸ்டிஸ் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்கலாம். அவளொரு வாலிப ஸ்திரீயாய் இருக்கிறாள் என்று நினைக்கிறேன். அதுதானே, அது சரிதானே சகோதரி. ஒரு வாலிப ஸ்திரீ, அவளுடைய தாயார் என்னைத் தொலைபேசியில் அழைத்து அவள் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை விட்டுப்போகிறாள் என்று கூறினார். நிச்சயமாக அது மிகவும் மோசமானது. 6இந்த அழிந்து போகிற ஜீவியத்தின் பொல்லாங் கானதைத் தான் அது காட்டுகிறது இல்லையா. ஆனால், அவள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக இருப்பாளானால் இன்றிரவு அவள் இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்திருக்கிற எந்த நபரைக் காட்டிலும் மேலானவளாய் இருப்பாள். எல்லா அழிவுள்ளவர்களும் போகவேண்டியதான மரண இருளின் பள்ளத்தாக்கின் ஊடாக நடந்து, கடந்து சென்றுவிட்டாள். என்றாவது ஒருநாள் நீங்களும் நானும் கூட அந்த வழியாக பிரயாணம் செய்ய வேண்டிய வர்களாய் இருக்கிறோம். ஆனால் நாம் யோர்தானை தன்னந் தனியாக கடந்தாக வேண்டும். ஏனென்றால் அவர் நம்முடைய இரட்சகராயிருக்கிறார். எனவே உங்களுக்கு மோட்டாஸ் அடக்க வீட்டிற்கு வரவிரும்பினால் மேபிள் வீதியிலிருக்கிறது. நான் நினைக்கிறேன் அது லோகஸ்ட் என்று. நீங்கள் மேற்காக சென்றால் வால் தெரு வலது பக்கத்திலிருக்கிறது. அவர்களுடையது எங்கே என்று எனக்குத் தெரியாது. அதனுடைய எண் என்ன? 221. நான் வாலிபப் பையனாய் இருந்தபோது இருந்த ஸ்காட் அண்டு ஹோம்ஸ் இருந்ததே அங்கே ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு அது இருக்கும். 7பின்னர், ஞாயிறு மாலை மீண்டுமாய் வழக்கமான ஆராதனை இருக்கும். நாம் இங்கே அநேகமாக ஞாயிறு இரவு, மரணம் அடக்கம், உயிர்த்தெழுதலைப்பற்றி பிரசங்கிக்கிறோம். வருகின்றதான வாரத்திலே நம்முடைய கர்த்தர் என்ன செய்வார் என்று நமக்குத் தெரியாது. ஆராதனைகள் தொடர்ந்து நடக்குமா? அல்லது அடுத்த வாரத்திற்கு வேறு என்ன? ஞாயிறு இங்கே இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், அது இருக்கலாம். சுற்றிலுமுள்ள போதகர்களை நான் அங்கீகரிக்கிறேன். திரு. புல்லர் அவர்கள் இங்கு வந்திருக்கிறார் என்று யாரோ சொன்னார்கள். இங்கே கூட்டங்களுக்கு வருவதுண்டு, அவர் இங்கிருக்கிறாரா? நியூயார்க்கில் என்னை இடத்திலிருந்து இடத்திற்கு கூட்டங்களுக்காக அழைத்துக்கொண்டுப் போன அந்த மனிதர் நீர்தானே? சகோதரன் புல்லர் உம்மைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. சகோதரன் புல்லர் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. அடுத்தாற் போல் நான் இன்னொரு சிறிய போதகரைக் காண்கிறேன் அது சகோதரன் டாமுக்குக் கூட தெரியாது. எனக்குக் கூட அந்தப் பையனின் கடைசி பெயர் தெரியாது. ஆனால் அவனை ஜூனியர் என்று அங்கே அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஜாக்சன், சகோதரன் ஜாக்சன், ஜூனியர் ஜாக்சன் உம்முடைய கரத்தை உயர்த்தும், சகோதரன் ஜாக்சன் உம்மை எங்கள் மத்தியில் காண, சந்தோஷப்படுகிறோம். அவர் எலிசபெத்திலுள்ள அந்த மெத்தொடிஸ்டு சபையைச் சேர்ந்தவர் அங்கிருந்து வந்திருக்கிறார். கர்த்தருக்குச் சித்தமாயிருந்தால் நாம் மீண்டுமாய் ஊழியங்களுக்காய்ப் போவதற்கு முன்னதாக, சீக்கிரத்தில் அங்கே ஒரு கூட்டம் நடத்துவதாக இருக்கிறேன். இப்பொழுது, இந்தியாவுக்கான மகத்தான அழைப்பு, எல்லாக் காரியங்களும், அடர்த்தியின் மேல் அடர்த்தியாகிக் கொண்டே போகிறது. எனக்காக ஜெபியுங்கள். 8இப்பொழுது, இன்றிரவு பெரிய வெள்ளிக்கிழமை ஓ, நான் நினைக்கிறேன் எருசலேமில் சூரியன் நன்றாக உயரே எழும்பியிருக்கும். சனிக்கிழமை காலை, ஆனால் நாள் முழுவது மாக சிலுவையை இழுத்துக்கொண்டு சுமந்த அவருடைய இரத்த அடிச்சுவடுகள் சென்ற அதே பாதையிலே ஜனங்கள் கண்ணீரோடு ஜனங்கள் ஆத்துமாக்களை பாதிக்க அழுதுகொண்டு நகர்ந்து போய்க்கொண்டேயிருப்பார்கள். அநேக மகத்தான தேவாலயங் கள் முதலானவைகள், இந்த மகத்தான நினைவு கூருதலான நேரத்தை இன்றைக்குக் கொண்டாடுவார்கள். உலகமானது கொண்டாடத்தக்கதான ஏதாவது நேரம் இருக்கிறதென்றால் தொல்லையான இந்த மணிவேளையில் அது இப்பொழு திருக்கிறது. இந்த சிறிய ஆர்கனைப் பார்க்கையில் இங்கேயிருக்கும் பழைய ஆர்கன், எனக்கு ஆர்கனைப் பிடிக்கும். நான் பழங்கால காரியங்களை விரும்புகிறவன். நம்முடைய சகோதரி அதில் நமக்கு ஒரு சுரத்தைக் கொடுப்பார்களா என வியக்கிறேன். இயேசுவே சிலுவையண்டை என்னை வைத்துக் கொள்ளும் என்ற பாடல்... அந்த நல்ல பழங்கால இருதயம் தொடும் பாடல்களில் ஒன்றை அநேக காலத்திற்கு முன்னர் நாங்கள் பாடுவதுண்டு. நாம் எல்லோருமாக இதை சேர்ந்து பாடுவோமா என நான் வியக்கிறேன். அதை நான் நேசிக்கிறேன். அங்கே ஒரு விலையேறப்பெற்ற ஊற்று இருக்கிறது, அது கல்வாரி மலையிலிருந்து பாய்கிறது, யாவருக்கும் இலவசம் ஒரு சுகமளிக்கும் ஓடை. எப்படியிருந்தாலும், அதில் எத்தனை பேருக்கு அதில் சரணம் தெரியும். சரி இப்பொழுது என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள். இப்பொழுது நாம் நம்மைச் சுற்றிலுமாயிருக்கிற இந்தத் திரைகளைக் கீழே இறக்கி விட்டு, நம்முடைய சிந்தையை, ஒரு ஆயிரத்து தொள்ளாயிரம் வருஷங்களுக்கு முன்னாகக் கொண்டுப்போய், இந்த பிற்பகலுக்கு நிறுத்துவோம். என்னே! ஒரு பலி. அதைப் போன்ற தொன்றை உலகம் இதுவரையிலும் அறிந்ததேயில்லை. முழு உலகத்தையே அது அசைத்தது. உங்களுக்கு அந்த ஸ்தலத்தில், அவரோடு ஐக்கியமும் ஆசீர்வாதமும், உங்களுக்கு உண்டான அந்த ஸ்தலத்தில் நீங்கள் இருக்க விருப்பமில்லையா? 9இப்பொழுது நாம் எல்லோருமாக சேர்ந்து அந்த பழங்கால விதத்திலேயே பாடுவோமாக. நீங்கள் வழக்கமாக பாடுகின்ற பாணியில் பாடுங்கள். நீங்களாகவே, உங்களுக்கு பாடிக்கொள்ளுங்கள். சரி, சகோதரன் டாம், நான் துவங்க நீர் எனக்கு உதவி செய்யும். இப்பொழுது எனக்குப் போதிய அளவு சத்தமில்லை . அப்படியானால், சரியா, சரி. (சகோ.ராபர்ட் டாம் 'சிலுவையண்டையில்' எனப் பாட உதவி செய்கிறார் - ஆசி) இயேசுவே சிலுவையண்டை என்னை வைத்துக் கொள்ளும், அங்கே ஒரு விலையேறப் பெற்ற ஊற்று இருக்கிறது யாவருக்கும் அது இலவசம், ஒரு சுகமளிக்கும் ஓடை அது, கல்வாரி மலையிலிருந்து பாய்கிறது. கல்வாரியில், கல்வாரியில் என் மகிமை என்றும், என் எடுத்துக் கொள்ளப்படப்போகிற ஆத்துமா, அக்கரைக்கு அப்பால் இளைப்பாறுதலைக் காணும். நீங்கள் தலையை வணங்கியவாறு இருக்கையில், உங்களால் கூடுமானால் மிகவும் பொறுமையாக, இம். கொட்டிப் பாடுங்கள். (சகோ.பிரன்ஹாமும் சபையாரும், 'சிலுவையண் டையில் ஊற்று இருக்கிறது' என கொட்டிப்பாட ஆரம்பிக்கின்றனர் - ஆசி) சிலுவையண்டை நான் கவனிக்கையில் என்றும் நம்பிக்கையுடன் நம்புவேன் அக்கரைக்கு அப்பால் அந்த தங்க இழையை சேரும் வரை (சகோ.டாம் தொடர்ந்து மென்மையாக சிலுவையண் டையில்' என்ற பல்லவியை பாடுகிறார் - ஆசி) இப்பொழுது நீங்கள் சற்று சிந்திக்கக் கூடுமா என்று வியக்கின்றேன். உங்களுக்கு அதை ஒருவரும் செய்யவில்லை. உங்கள் ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு மறு அர்ப்பனை செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருப்பீர்களோ என வியக்கின்றேன். நீங்கள் அதை செய்து, கர்த்தாவே உம்மைப் பாராட்டுகிறேன். நீர் களைத்துப்போய் வேதனை அனுபவித்துக் கொண்டு, இரத்தம் கசிந்து கொண்டு, எனக்காக மரித்துக் கொண்டிருந்தீர். நான் தகுதியற்றவன். ஆனால் இப்பொழுது நான் எனது கரத்தை உயரே தூக்கப்போகிறேன். கர்த்தாவே! நீர் என்னைக் காண்பீர், சரி, என்னுடைய ஜீவியத்தை மீண்டுமாய் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. கர்த்தாவே இப்பொழுது என்னை மீண்டுமாய் உமக்கு இந்தப் பெரிய வெள்ளிக்கிழமை இரவில் தத்தம் செய்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! 10பிதாவே! கரங்களை உயர்த்தினவர்களையும், கரங்களை உயர்த்தப் போதுமான தைரியமில்லாதவர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். எல்லாவற்றுக் கும் போதுமான அவர் இன்றிரவு அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் கல்வாரியைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். தேவனும் நம்முடைய இரட்சகரும் அங்கே சுமத்தப்பட்ட பாவத்துடன் கீழே கிடந்தார். ஒரு ஐசுவரிய வானுடைய கரங்களில் கொடுக்கப்பட்டார். பிலாத்துவிடம் கெஞ்சி கேட்டு, அந்தச் சரீரம் அவருடைய கரத்தில் கொடுக்கப் பட்டு, அவன் அதைக் கொண்டுபோய், சுத்தமான மெல்லிய துணியினால் சுற்றி கல்லறையில் கிடத்தினான். ஓ, தேவனே! அந்தப் பரிதாபமான அப்போஸ்தலருக்கு என்னவிதமான ஒரு உணர்வு இருந்திருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் தோற்றுப் போனதுபோன்று இருந்திருக்கும். அவர்கள் அவ்வளவாய் நம்பியிருந்த ஒருவர், இப்பொழுது போய்விட்டார். ஆனால் நீண்ட காலத்திற்கல்ல, ஒரு இரத்தம் கசியும் பலி, அவ்வளவுதான். சில நாள், சில மணிநேரங்களுக்குப் பின்னர், அவர் எழும்பினார் அதன் பிறகு சந்தோஷம் வந்தது. 11கர்த்தாவே, இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இந்தக் காலத்திலிருப்பதினாலே, அது எங்கள் மேலிருந்து எங்களுடைய மீட்பிற்காக செலுத்தப்பட்ட பாடுகளின் கிரயத்தை, நாங்கள் சந்தோஷமாய் இருப்பதற்காக செலுத்தப்பட்ட துக்கத்தின் கிரயத்தை நாங்கள் காணும்படியாய், இருப்பதாக. எங்களுடைய ஆத்துமாக்கள், இன்றிரவு கர்த்தாவே நாங்கள் எங்களையே உமக்கு அர்பணித்து எங்களுடைய ஆத்துமா பாதிப்புக்குள்ளாகி அக்கரையை நோக்கிப் பார்த்து என்னத்தைக் காண்பது. ஓ, தேவனே! என்ன ஒரு கோரமான மரணம். பாவம் எவ்வளவு கொடூரமாய் இருக்க வேண்டும். இப்பொழுது, எங்களை ஒன்று சேர்த்து ஆசீர்வதிக்கும்படியாய் நான் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே!, எனக்கு நீர் உதவி செய்யும். உம்முடைய ஒரு ஊழியனாய் மோசமான ஒரு குரலோடு நின்று கொண்டிருக் கிறேன். உம்முடைய பிள்ளைகள் வார்த்தையிலிருந்து ஏதாவது காரியத்தைக் கேட்கும்படியாய் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே. எங்களுடைய ஜீவியங் களையும், எங்களுடைய இருதயங்களையும் மறு அர்ப்பணம் செய்யும் போது, எங்கள் ஒவ்வொருவருக்கும் ஜீவ வார்த்தையை இலவசமாய் பிட்டுத்தாரும். இந்த பலியைக்குறித்து நாங்கள் சிந்திக்கையில் எங்களுடைய இருதயத்தின் கண்ணீர் ஆழத்துக் குள்ளாக மார்பில் சொட்டுகிறது. எங்களுக்கு இப்பொழுது உதவி செய்யும். ஏனென்றால், நாங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 12நீங்கள் சற்று நேரம், உங்களுடைய பகுக்கப்படாத கவனத்தை எனக்குக் கொடுத்தால், நான் வாசிக்க விரும்புகிறேன். எனக்காக ஜெபியுங்கள். ஏசாயா 53-ம் அதிகாரத்தில்.... இன்றைக்கு நாம் அநேகமாக வானொலி முதலான நிகழ்ச்சியில் கேட்டிருப்போம். இன்றைக்கு நான் கிறிஸ்துவைப் பற்றி சற்றே நினைத்தேன். வெளியே எங்கேயாவது போய், கீழே முழங்கால் படியிடாமல் இருக்க என்னால் முடியவில்லை . நான் நினைத்துப் பார்த்த பொழுது, அங்கே கல்வாரியில் என்ன நடந்தது என்பதை என் மனம் அங்கு சென்று அதைக்கண்டபோது நான் அழ வேண்டியதாயிருந்தது. ஒருவேளை அவர்கள் சுவிசேஷத்திலிருந்து அதைப் பிரசங்கித்திருந்தாலும் நான் எந்த ஒரு வானொலி நிகழ்ச்சி களையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை... நாளையிரவு நாம் அந்த நிலைப்பாட்டிலிருந்து அதை அணுகலாம். 13ஆனால், இன்றிரவு நாம் பழைய ஏற்பாட்டிற்கு திரும்பிப் போவோம். நான் பாவத்தின் கொடூரமும், நம்முடைய ஜீவனிலிருந்து பாவத்தை நீக்க அதற்கான தண்டனையின் கிரயமும் என்பதன் பேரில் பேச இருக்கிறேன். ஏசாயா 53-ல், கர்த்தர் வருவதற்கு 712 வருடங்களுக்கு முன்னர், தீர்க்கதரிசி அபிஷேகம் பண்ணப்பட்டவராய் இந்த வார்த்தைகளைக் கூறினார். “எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும் போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவரு மாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத் தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயைதிறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப் பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்த போது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும் போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்“ நான் வேத வார்த்தைகளின்படியான சர்ந்தர்ப்பமாய் அழைக்க விரும்பினால், நான் ஆறாம் வசனத்தை எடுத்துக்கொள்கிறேன். “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”. 14நான் ஒரு சிறிது நேரம் மட்டுமே பேச விரும்புகிறேன். கர்த்தருடைய சந்தோஷம் நமது மத்தியில் இருக்கின்றதாக இருக்கும் பொழுது. நாம் எப்பொழுதும் சந்தோஷமாயிருக் கிறோம். நான் எப்படியாய் உங்களோடு, அதிகமாய் மகிழ்ச்சி யடைகிறேன். ஆனால் அதை நீங்கள் உடையவர்களாய் இருக்க அதற்கு என்ன கிரயமானது செலுத்தப்பட்டது என்பதை நீங்கள் நின்று சிந்தித்துப் பார்த்ததுண்டா! அதற்கான கிரயம் என்ன? நியாயத்தீர்ப்பானது என்னவாய் இருந்தது. பாவத்தின் அபராதம் என்ன? என்பதைக் குறித்து எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா! தேவனுடைய குமாரனை கல்வாரிக்குக் போகும்படியாய் செய்து தேவன் அவரை அடிக்கும்படியாய் செய்து அவரிடத்திலிருந்து, தம்முடைய முகத்தை திருப்பிக் கொண்டு, அவரை அடித்தது, அவர் சிறுமைப்படுத்தப்பட்டது, இவைகளை நேரிடச் செய்த பாவம் எப்படிப்பட்ட கொடூரமானதாய் இருக்கிறது. அவர் யாராக இருந்தார் என்று பாருங்கள். பேசிக்கொண்டிருக்கையில், இப்பொழுது நான் உங்களுக்கு, ஒரு காட்சியை உருவகப்படுத்தப் போகிறேன். நாமெல்லோருமாக இன்றிரவு, ஒரு சிறு கப்பலில் ஒரு சிறு ஆகாய வெளி கப்பல் எடுத்துக் கொண்டு, ஒரு சிறு பிரயாணம் போவோம். உலகமென்ற ஒன்றும், நட்சத்திரங்களும் இல்லா திருந்ததான ஒரு பத்து கோடி வருஷங்களுக்குப் பின்னாகப் போவோம். அங்கே உங்களால், ஆகாய வெளியைத் தவிர வேறொன்றையும் காணமுடியாது. அந்த வெளியெல்லாம் தேவனாயிருந்தது. ஆதியிலே தேவன் இருந்தார். இப்பொழுது ஒரு சிறு வெள்ளையான வெளிச்சம் நாம் காணக்கூடியதாய் வந்து கொண்டிருக்கிறதை நாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அதை பரிவட்டம் என்று அழைக் கிறோம். அதுதான் தேவனுடைய குமாரன். ஆதியிலே தேவனிடத் திலிருந்து புறப்பட்டுச் சென்ற லோகாஸ், வார்த்தையாகும். 15பின்னர் அவர் எவ்விதமாய் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர், அவரது சிந்தையில் உலகம் எந்தவிதமாய் இருக்குமென்பதை அவர் சிந்திக்கத் துவங்கி, அவருடைய சிந்தைக்குள், இந்த எல்லாக் காட்சியையும் வரைந்திருந்தார். அவர் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். ஒரு அணு பிளந்து உடைந்து கொண்டே முன்னே போனது. ஒரு அணு சக்தி வெளியேறியது. முதலாவது அணு, அதிர்வெடி ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த அணுக்களெல்லாம் ஒன்று சேரத்துவங்கி, பாதி எரிந்த ஒன்றாய்த் திரண்டது. ஈரப்பசை போன்று அது என்னவாக இருந்ததோ அது உடையத்துவங்கியது. அணுக்கள் பிளந்தது. கொஞ்சம் கழித்து அங்கே ஒரு நட்சத்திரம் வந்தது அல்லது அதிலிருந்து பறந்து சென்ற ஏவுகணையின் ஒரு சிறு துண்டு. அப்படியே பறந்து ஆகாயத்தின் ஊடாக மிதந்து சென்றது. அவர் அதை ஒருவேளை, பல இலட்சக்கணக்கான வருஷங்களாக கவனித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அதை நிறுத்தினார். அவருக்கு ஒன்றும் அவசரமில்லை . அவருக்கு என்றென்றைக்குமாக அதிகப்படியான நேரமிருந்தது. அவர் துவக்கத்திலிருந்து முடிவுமட்டுமாய் இருக்கிறார். அவரோடு கால வரம்பு என்பது கிடையாது. அதன்பிறகு இன்னொன்று பறந்து சென்றது. அவர் அதை இந்தப் பக்கமாக நிறுத்தினார். 16அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அவருடைய முதலாவது வேதாகமத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். முதலாவது வேதாகமம் எழுதப்பட்டது என்றால் அது ஆகாயத்தில் எழுதப்பட்டது. வானராசிகளாகும். அது கன்னியில் துவங்குகிறது. அந்தவிதமாகத்தான் அவர் முதல் முறையில் வந்தார். அது சிம்மத்தில், சிங்கத்தில் முடிகிறது. இரண்டாவது வருகை அவருடைய முதலாவது வேதாகமத்தை அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது வேதாகமம் எழுதப்பட்டது அது ஏனோக்கினால் எழுதப்பட்டு கூர்நுனி கோபுரத்தில் பொருத்தப் பட்டது. மூன்றாவது வேதாகமம், எழுதப்பட்டது. கடைசியான அது இந்த ஒன்றுதான். (தீர்க்கதரிசி அவருடைய வேதாகமத்தை கையில் எடுத்து சபைக்குக் காட்டுகிறார்-ஆசி) தேவன் எப்பொழுதும் மூன்றுகளில் காரியங்களைச் செய்கிறார். தேவன் மூன்றில் பரிபூரணமாய் இருக்கிறார். அவர் பூரணசற்குணராயிருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியில் பரிபூரணமாயிருக்கிறார். நீதிமானாகுதல், பரிசுத்தமாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் பரிபூரணமாய் இருக்கிறார். அவர் மூன்றுகளில் அவர் பரிபூரணப்படுகிறார். நாம் அவருடைய உண்டாக்குதலில் இருக்கிறோம். எனவே, நாம் ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றில் பரிபூரணமாக்கப் படுகிறோம். நம்முடைய சரீரமானது நரம்புகளாலும், இரத்தத்தி னாலும், தசைகளினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. மூன்று சகலமும் மூன்றில் பரிபூரணப்படுகிறது. 17அவர் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும், அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும், செய்து முடிந்த பின்னர் அதன் பிறகு அவர் கூறினார். இந்தச் சிறிய பரிவட்டமானது அசைந்து, இந்த உலகத்திற்கு மேலாக வருகிறதை என்னால் காணமுடிகிறது. உலகமோ வெறுமனே ஒரு அரைகுறையாய் எரிந்து போன காரியமாய் உறைந்து போக மகத்தான மிதக்கும் பனிக்கட்டிப் பாறையைப் போன்று அங்கே தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அதை சூரியனுக்கு அருகே கொண்டு போனார். சூரியனைச் சுற்றி அதை இந்தவிதமாகச் சுற்றிவிடத் துவங்கினார். அது உருகத் துவங்கியது. பெரிய பனிக்கட்டிப் பாறைகள் கட்டுவிட்டது. டெக்ஸாஸ் நாடும் அங்கேயுள்ள சமபூமியும் உருவாகத் துவங்கியது. இந்த மகத்தான பனிப் பாறைகள் எப்படி இங்கே வந்தன என்று போதித்துள்ளபடியாக, கால அளவு பட்டியல்காரர்கள் அதைக் கணித்தும் கூற முடியும். அதன் பிறகு முழு உலகமும் மெக்சிக்கோ வளைகுடா முதலானவைகளின் வழியாக வழிந்தோடி பிறகு தண்ணீரோடு கலக்கத் துவங்கினது. பூமியானது வெறுமையாயும், ஒழுங்கின்மை யாயும் இருந்தது, பாருங்கள். இப்பொழுது நாம் ஆதியாகமம் ஒன்றில் இருக்கிறோம். பின்னர் தேவன் அசைவாடி தண்ணீர் களிடத்திலிருந்து ஆகாயவிரிவை வேறு பிரித்தார். அவர் வெளிச்சத்தை உண்டாக்கினார். அதன் பிறகு அவர் எல்லா சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தார். அதன் பின்னர் இதை அவர் செய்த பிறகு எல்லா மரங்களும் தாவரங்களும் முளைத்தெழும்பின. என்ன அருமை யான பார்வையாய், அமைப்பாய் அவருக்கு இருந்திருக்கும். அவர் அதை விரும்பினார். அது அழகாய் இருந்தது. அது அருமையாய் இருக்கிறது என்று அவர் கருதினார். 18ஆகவே அந்த நிலையில் அப்படியே விட்டுவிட விருப்பமில்லை, அதனோடு வேறு ஏதாவது காரியத்தை வைக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவர் பன்மையில் நாம் மனுஷனை உண்டாக்குவோமாக, பன்மையில் நமது சாயலாக என்று நமது சாயலாக, நாம் மனுஷனை உண்டாக்குவோமா என்றார். ஆக அதன் பின்னர் தேவன் அவருடைய முதல் மனிதனை உண்டாக்கின போது, அவன் ஒரு ஆவியான மனிதனாக இருந்தான். அந்த மனிதன், தேவன் அல்லது தேவனுடைய குமாரனாகிய லோகோஸ் வார்த்தை என்ற அந்த அந்தஸ்திலிருந்தான், அதுதான் முதல் மனிதன். பின்னர் அவர் எல்லா ஜீவஜந்துக்களின் மேலும் ஆளுகையை மனிதனுக்குக் கொடுத்தார். இன்றைக்குப் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை நடத்திக்கொண்டு போவதுபோல், மனிதன் ஜீவஜந்துக்களை வழிநடத்தும்படி அதிகாரம் கொடுத்தார். இங்கே போ, இதைச் செய் என்பது போன்று. இப்பொழுது, பரிசுத்த ஆவியானவருக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதில் நாம் பரிபூரணமாய் இருந்தால், அன்றைக்கு ஆதாம் ஜீவஜந்துக்களை வழிநடத்தினது போன்று பரிசுத்த ஆவியின் மூலமாக, தேவன் நம்மை வழிநடத்துவார். 19ஆக அவர் அவைகளை உண்டு பண்ணினார். அவர் செய்ததற்குப் பின்னர், பூமியின் மேலுள்ள மண்ணினால் மனிதனை உருவாக்குவது என்ற கருத்தின் மேல் அவர் அசைவாடிக்கொண்டிருந்தார். நிலத்தைப் பண்படுத்த அங்கு ஏதும் மனிதன் இல்லை. வேலை செய்ய அங்கே ஒருவருமில்லை. சரீரப் பிரகாரமாக அங்கே ஒன்றுமே இல்லை. ஆகையினால், அவர் பூமியின் தூளிலிருந்து மனிதனை உண்டாக்கினார். அங்கே தான் தாவர ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, கிறிஸ்தவன் இவைகள் ஒன்றோடொன்று முரண்பாடு கொள்வ தில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் மனிதன் வித்தியாசமான ஜீவனிலிருந்து வந்தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. நீங்கள் ஒரு மனிதனை நோக்கிப் பார்க்கும் போது அவன் தேவனுடைய சாயலாக இருக்கிறான் என்று நாம் கூறுகிறோம். துவக்கத்தில் இது தேவனுடைய சாயலல்ல. இது பிராணிகளின் ஜீவன்களின் சாயலாக இருக்கிறது. பரிணாமங்கள் இவ்விதம் வாதம் செய்கின்றனர். அவர்கள் கூறுகின்றபடியான சங்கிலித் தொடர் பரிமாணத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதாவது சகலமும் ஒரு ஜீவனிவிலிருந்து வருகின்றது என்பது ஆனால் நாம் ஒன்றிலிருந்துதான் விருத்தியாகி வந்தோம் என்று நம்புகிறேன். நிச்சயமாக ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதன், விருத்தியாகி வந்தோம். 20தேவன் இவையெல்லாவற்றையும் செய்து முடித்த பின்னர் பூமியின் தூளிலிருந்து மனிதனை உண்டாக்கினார். அவருடைய சொந்த சாயலின்படியாய் அல்ல, அவர் ஏற்கனவே, மனிதனை உண்டாக்கி விட்டார். அதற்குப் பின்னர் அவனுக் குள்ளாக ஜீவ ஆத்துமாவானான். எனவே மனிதனுடைய ஆத்துமா அவருடைய ஆவியின் சுபாவமாயிருக்கிறது. இப்பொழுது நீங்கள் மறுபடியுமாய் பிறக்கும் போது ஒன்றும் ஒரு புதிய ஆவியைப் பெற்றுக்கொள்வதில்லை. அந்த ஆவியின் ஒரு புதிய சுபாவத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள். அது அதே ஆவிதான், ஆனால் அதின் புதிய சுபாவம். நீங்கள் இரண்டு மனிதர்களை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து நிற்க வையுங்கள். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாய் இருப்பார்கள். அவர்களில் ஒருவன் ஒரு பாவியாயிருக்கிறான், இன்னொருவன் கிறிஸ்தவனாயிருக்கிறான். உனக்கு இருப்பது போன்று எனக்கும் ஆவியிருக்கிறது என ஒரு மனிதன் கூறுவான். ஆனால், அவர்களில் ஒருவன் வித்தியாசமாய் இருக்கிறான். அவனுடைய ஆவி வித்தியாசமாயிருக்கிறது. அவனுடைய சுபாவம் வித்தியாசமாயிருக்கிறது. அவன் மாற்றப்பட்டிருக்கிறான். 21ஆக அதற்குப் பின்னர் ஜீவசுவாசத்தை அந்த மனிதனுக்குள்ளாக ஊதினார். இப்பொழுது எப்படி என்று எனக்குத் தெரியாது. எப்படி அவனை உண்டாக்கினார் என்று. அவன் இந்த பூமியோடு தொடர்பு கொள்ளும்படியாக அவனை ஐந்து புலன்களுக்குள்ளாக வைத்தார். காணுதல், ருசித்தல், முகருதல், உணர்தல், கேட்குதல். அவனை அந்தவிதமாக உண்டாக்கினார். தேவனோடு தொடர்பு கொள்வதற்கு அல்ல. தேவனோடு தொடர்புகொள்ள அவனுக்கு உண்டான புலன் அவனுடைய ஆவியாயிருக்கிறது. பாவம் செய்கிற ஆத்துமா, அந்த ஆத்துமா மரிக்கும். உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறுவதற்காக நான் அப்படியே சுற்றிக்கொண்டு போகிறேன். ஆனால் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் புரிந்து கொண்டு தேவனை, கல்வாரியில் சரியாக அப்படியே என்ன செய்வதாக வேண்டும் என்பதைக் காணமுடியும் என்பதில் நான் நம்பிக்கையாயிருக் கிறேன். 22அதற்குப் பின்னர் அந்த மனிதனை அவனுடைய ஐந்து புலன்களுக்குள்ளாக விட்டார். அதன் பிறகு, மனிதன் தனிமையாய் இருந்தான். எனவே அவனுக்கு ஒரு மனைவியை, துணைவியை உண்டாக்கினார். அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை வெளியே எடுத்து ஒரு ஸ்திரீயை உண்டு பண்ணினார். அங்கே ஒரு அழகான பாவனை. மணவாட்டியை தேவன் கிறிஸ்துவின் விலாவிலிருந்து எடுக்கிறதற்கு எல்லாம் பாவனையாயிருக்கிறது. புரிகின்றதா ! தேவன் ஆதாமின் பக்கவாட்டைத் திறந்து ஒரு விலா எலும்பை எடுத்தார். அதனால் தான் சரீர அமைப்பில் ஸ்திரீயைக் காட்டிலும் ஒரு மனிதனுக்கு ஒரு எலும்பு குறைவாக இருக்கும். தேவன் கிறிஸ்துவின் பக்கவாட்டைக் கல்வாரியில் திறந்து மணவாட்டியை வெளியே எடுத்தார். சபையானது கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக வருகிறது. நாம் அந்தவிதமாகத்தான் உள்ளே வருகிறோம். வேறு எந்த வ பின் மூலமாக அல்ல. நீங்கள் எவ்வளவு நல்ல சபையை சார்ந்திருந்தாலும் நீங்கள் எவ்வளவு நல்ல ஒரு மனிதனாக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு ஒரு நல்ல ஸ்திரீயாக இருந்தாலும் கவலையில்லை. நீங்கள் தேவனுடைய எல்லவற்றுக் கும் போதுமான அவருடைய அளிக்கப்பட்ட வழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள் அது உண்மை. நீங்கள் உள்ளே வர இருக்கின்றதான அந்த ஒரே வழி அங்கே அதனூடாகத்தான் இப்பொழுது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதுதான் வாசல். 23இயேசுவானாவர் இந்த பூமியின் மேல் இருந்தபோது அவர் ஒரு பெயர் பெற்ற உவமையைச் சொன்னார். அவர் சொன்னார், கலியாண விருந்து ஆயத்தம் பண்ணப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வஸ்திரம் கொடுக்கப்பட்டது. அங்கே ஒருவன் கலியாண வஸ்திரம் இல்லாதவனாக இருக்கக் கண்டு நண்பனே! நீ என்ன கலியாண வஸ்திரம் எப்படி உனக்குக் கிடைக்காமல் போனது என்று கூறினான். பண்டைய கிழக்கத்திய நாடுகளின் வழக்கம் என்னவென்றால், மணவாளன் ஒவ்வொருவரையும் அழைக்கும் போதும் அவன் ஐம்பது பேர்களை அழைத்து ஐம்பது மேல் அங்கிகளை வைத்திருப்பான். அவன் கதவண்டை எங்காவது நின்றுகொண்டு ஒவ்வொரு முறை ஒரு மனிதன் வரும்பொழுதும் ஐசுவரியவானோ அல்லது ஏழையோ அவன் ஒரு மேல் அங்கியைப் போடுவான். அப்பொழுது அவன் ஏழையா? ஐசுவரியவனா? என்பதை ஒருவரும் அறியார்கள். அவனும் யாவரும் ஒரு அங்கியின் கீழாக ஒரே மாதிரியாய்க் காணப்படுவார்கள். அந்தவிதமாகத்தான் தேவன் இன்றைக்குச் செய்கிறார் அவர் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். அது ஒரு பாவனையா யிருக்கிறது. அவர் அழைக்கின்ற ஒவ்வொரு மனிதனும், நாமெல்லோரும் ஒரே மாதிரியாயிருப்போம். இந்த ஒன்றல்ல ஏனென்றால் அதைக் காட்டிலும் இந்த ஒன்று மேலானதாய் இருக்கிறது. அந்த ஒன்று, இந்த ஒன்றைக்காட்டிலும் உயர்ந்தது. நாம் யாவரும் கல்யாண விருந்திற்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் ஒரே மாதிரியாய் இருக்கிறோம். 24பின்னர் அவர் உள்ளே வந்தபோது ஒரு மனிதன் கலியாண வஸ்திரம் இல்லாதிருக்கக் கொண்டார். இப்பொழுது அங்கே உள்ளே வருவதற்கு ஒரேயொரு கதவுதான் இருக்கிறது. ஏனென்றால் அங்கேதான் வஸ்திரங்கள் கொடுக்கப்படுகிறது. விருந்து மேஜையில், அங்கே ஒருவன் வஸ்திரம் இல்லாதவனாக இருக்கக்கண்டார். அவன் நண்பனே, நீ என்ன செய்கிறாய்? உன் மேல் ஏன் அந்த வஸ்திரம் இல்லை என்று கேட்டான். அந்த மனிதன் வாய் அடைத்துப் போயிருந்தான். அவன் ஒரு ஜன்னல் வழியாய் வேறு ஏதோ வழியாய் உள்ளே வந்தான். அவன் கதவின் வழியாக வரவில்லை . கிறிஸ்துவின் மூலமாய், கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக வருகின்ற ஒவ்வொரு மனிதனும் மேலங்கியாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறான். நீங்கள் உள்ளே வந்த மாத்திரத்தில் அதை உங்கள் மேல் போடும்படியாக, அவர்தானே அங்கே நின்று கொண்டிருக்கிறார், பாருங்கள். அதைத்தான் அவர் வாக்களித்திருக்கிறார். அதைத்தான் அவர் செய்கிறார். 25இப்பொழுது திரும்பவுமாக ஆதியிலே ஏதேனில் அவர் அவனுக்கு ஒரு மனைவியை, துணைவியை உண்டு பண்ணினார். இந்த கர்த்தருடைய புஸ்தகத்தில் உள்ள படங்களை நீங்கள் இப்பொழுது பாருங்கள். எப்பொழுதோ ஒரு ஓவியன் வரைந்துள்ளான். அது ஒரு மிகவும் குறைவான எழுச்சியை உடையதாயிருக்கிறது. நீங்கள் ஏவாளை அந்தவிதமாக வயிறெல்லாம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கக் காண்பது மிகவும் பயங்கரமாக, மிகவும் மோசமாக இருக்கிறது. அதை நம்முடைய தாய் என்று கூறுவதா? உலகத்தில் ஒருவராலும் அதைப் பார்த்து வியக்க முடியாது. ஏவாள் மிகவும் அழகுள்ள ஸ்திரீயாய் இதுவரை இருந்திராதவளாய் இருப்பாள் என்று நான் நம்புகிறேன். அது உண்மை . ஆதாம் அவளை நோக்கிப் பார்த்து போது, ஏன்? இன்றைக்கு இருக்கின்ற மானிடவர்க்கம் அந்த வழியாகத்தான் வந்திருக்கிறது என்பதை அந்த கூரை அந்த பாங்கு அதைக் காட்டுகிறது. அந்த விதமாக இல்லையென்றால் அது மாறுதலாயிருக்கும். 26எனவே ஆதாம் ஏவாளை அவன் மனைவியாக எடுத்துக்கொண்டான். அதற்குப் பின்னரே, பாவம் வந்தது. அது என்னவாக இருந்தது என்பதனைப் பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. அதைச் சபையில் எடுத்துக் கூறுவதில்லை. அது ஒரு சிறிய ஞாயிறு பள்ளி வகுப்பு போன்று இருந்தாலொழிய ஆதியிலே பாவம் என்னவாக இருந்தது என்பதனை நான் கூறுவதில்லை . ஆனால் அது எப்படியிருந்தாலும், அது செய்யப்பட்டபோது அது தேவனுடன் அவர்களுக்கு இருந்த ஐக்கியத்தைப் பிரித்து விட்டது. நான் உங்களுக்குக் கூறவிரும்புகிறதான காட்சி இதுதான். தேவன் உணர்ந்து கொண்டபொழுது அல்லது ஏதோ தூதன் அல்லது ஏதோ ஜீவன் மேலே வந்து தேவனிடத்தில் உம்முடைய குமாரன் இழக்கப்பட்டுப் போனான். அவன் பாவம் செய்தான், அவன் விழுந்து போனான் என்று கூறினான். இப்பொழுது மனிதனின் வழி வழியான கூர் அவனுடைய பங்கை கவனியுங்கள். முதலாவது அவனாகவே ஒரு மார்க்கத்தை உண்டுபண்ணினான். ஒரு மனிதன் அவனுக்கு ஏதோ ஒருவிதமான மார்க்கம் இருக்கிறது. இங்கே அன்றொரு நாள் ஒரு பட்டணத்திலுள்ள பெயர் பெற்ற மனிதனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சகோதரன் பிரன்ஹாம், தங்க கட்டளையை கடைப்பிடிப்பதே என்னுடைய மார்க்கமாயிருக்கிறது என்றான். ஆனால், சகோதரனே! ஒரு மனிதன் மறுபடியும் பிறக்கவில்லையென்றால் அவன் அழிந்து போய்விடுவான். அவன் செய்யத்தான் வேண்டும். அவன் மறுபடியுமாய் பிறந்தாக வேண்டும். தங்கள் கட்டளையெல்லாம் சரிதான். ஒரு நெறிவாய்ந்த மனிதனால் அதைச் செய்யமுடியும். ஆனால் அதெல்லாம் இயற்கைக்கு மேம்பட்ட பாதையில் இருந்தாக வேண்டும். இயற்கைக்கு மேம்பட்டவிதமாய் நம்மை பிறக்க வைப்பதற்காக தேவன் என்ன செய்தாக வேண்டியதாய் இருக்கிறது என்பதைக் காணுவீர்கள். 27பின்னர் அவன் அப்படிப் பாவம் செய்தபோது அவனாகவே ஒரு மார்க்கத்தை அவனுக்கு உண்டு பண்ணிக் கொண்டான். மார்க்கம் என்றால் மூடிக்கொள்ளுதல் என்று அர்த்தம். அதுமூடும் ஏதோ காரியமாய் இருக்கிறது. இந்த மேலாடை எனக்கு அது ஒரு நெறிமுறை மார்க்கமாயிருக்கிறது. ஏனென்றால் அது என்னையே மூடிக்கொள்கிறது. உங்களுடைய ஆடைகள் அதேவிதம்தான். அது ஒரு மூடிக்கொள்ளுத லாயிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். தேவனை அவன் சந்திக்காமல் இருந்தவரைக்கும் அவனுடைய அத்தியிலை போதுமானதாய் இருந்தது. ஆனால் அவன் தேவனை சந்திக்க வேண்டியதானபோது அவனுடைய அத்தியிலை ஒன்றுக்கும் பிரயோஜனப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். இப்பொழுது நண்பர்களே, நீங்கள் அருமையான நல்ல மனிதனென்று நினைத்துக் கொண்டிருக்கலாம். பாருங்கள். உண்மையிலேயே நீங்கள் அந்த விதமாக இருக்கலாம் அது உண்மை. ஆனால் நீங்கள் தேவனை சந்திக்க வேண்டி வரும்போது உங்களுக்கான தேவனால் அளிக்கப்பட்ட பலியை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் நீங்கள் இழக்கப்பட்டவர்கள். நீங்கள் இதை அறிந்து கொள்வீர்கள். 28நான் அவர்களுடைய பக்கத்தில் நின்று அவர்கள் மரிக்கிறதைக் கண்டிருக்கிறேன். ஹைப்பே ஊசியை வைத்தியர் அவர்களுடைய கரங்களில் போட்டு அவர்களை அமைதியாக்கு கின்றதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் உச்சக்குரலில் அலறிக் கொண்டிருக்கிறதைக் கேட்டேன். ஓ , அவர்கள் பக்கத்திலேயே அவர்கள் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். நான் வைத்தியரே இன்னும் ஒரு நிமிஷத்துக்கு அதைப் போடாதேயும் என்றேன். புரிகின்றதா! நீங்கள் சரியென்று நினைக்கும்போது அது உங்களால் கேட்கமுடியும். மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகின்ற வழியுண்டு, அதின் முடிவோ மரண வழிகள். தேவனால் மறு ஜென்மம் அடையாத எந்த ஒரு மனிதனும் அந்த வழியின் பாதையில் போவான். அதற்கு உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. உங்களுடைய சொந்த ஆத்துமாவே உங்களை வழிநடத்துகிறது. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருந்தால் நீங்கள் மேலே போவது நிச்சயமாய் இருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவில்லையென்றால் நீங்கள் கீழே போய்த்தான் ஆகவேண்டும். உங்களுடைய சொந்த ஆத்துமாவே அதைச் செய்யும். ஒரு மந்திரக்கோலைப் போன்று அது எங்கேயோ இருக்கின்ற கதவைத் திறக்கும் உங்களிடத்தில் மந்திரக்கோல் இல்லையென்றால் கதவு திறக்காது. நீங்கள் மறுபடியும் பிறவாதிருந்தால் நீங்கள் தானாகவே நிராகரிக்கப்படுவீர்கள். அவ்வளவுதான் இப்பொழுது... 29பின்னர் நான் பார்க்கும் பொழுது, பின்னர் அவர்கள் வெளியே வந்தபொழுது தேவனுக்குத் தெரியும் அவர்களால் அவருக்கு முன்பாக நிற்கமுடியாது என்று தேவன் அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருந்தார் அவர்கள் ஒளிந்து கொண்டிருந்தனர். புதர்களுக்குப் பின்னாக மறைந்து கொண்டிருந்தனர். இருந்தாலும் மூடிக்கொண்டிருந்தனர். ஆனால் அதை மூடிக்கொண்டிருந்தது போதாது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சபைக்குப் போகின்ற ஒவ்வொரு புருஷனும் ஸ்திரீயும்... பெரிய ஆலயங்களில் மணியோசை அடித்துக்கொண்டும் மணிகள் சப்தமிட்டுக் கொண்டும் இன்னும் முதலான காரியங்களைக் குறித்து இன்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஜனங்கள் சபைக்கு போய்க்கொண்டும், ஆயத்தமாகிக் கொண்டும் ஸ்திரீகள் அவர்களுடைய ஈஸ்டர் தொப்பி முதலான காரியங்களை வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இதெல்லாம் எதற்கு வந்தது? என்னே! எப்படியென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உயிர்த்தெழுதலோடு ஒரு முயல் என்ன செய்வதற்கு இருக்கிறது. பாருங்கள். இல்லை ஐயா! கிறிஸ்துவின் பிறப்போடு கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன செய்ய இருக்கிறது. அது அஞ்ஞானம் நண்பர்களே. நாம் எங்கேயோ பாதை தவறிப்போய் விட்டோம். அது உண்மை. ஆனால் ஒரு உண்மையான மறுபடியும் பிறந்த புருஷனோ , ஸ்திரீயோ அதை உணர்கிறான். ஏனென்றால் அங்கே உங்களுக்குள்ளாக இருக்கின்ற ஜீவன் அது தவறு என்று உங்களுக்குக் கூறுகின்றது. அது சரிதானே! (சபையோர் “ஆமென்” என்கிறார்கள்-ஆசீ). 30இப்பொழுது கவனியுங்கள், ஆதாமும் ஏவாளும் ஓ, என்னே! நான் அதைக்குறித்து நினைக்கும்போது, நட்சத்திரப் பிறப்பின் விளைவினால் எனக்கு எப்பொழுதும் இருந்ததான அந்த என்னுடைய நினைவுகள் எல்லாவற்றையும் இழந்து விடுகிறேன். காலத்திற்கு முன்பாக ஆதியிலே என்பதை நான் நினைக்கும் பொழுது கவனியுங்கள். நீங்கள் இரத்தத்தைக் குறித்துப் பேசுகிறீர்களா! இங்கு வெகு காலத்திற்கு முன்பல்ல. மகத்தான மெத்தோடிஸ்டு ஆலோசனைக் கூட்டத்தில் இரத்த சம்பந்தப் பட்டதான பாட்டுக்களையெல்லாம் அவர்களுடைய பாடல்களி லிருந்து நீக்கி விடும்படியாக பிரயாசங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒன்றும் கொலை கட்டிட மார்க்கம் அல்ல. எங்களுக்கு ஏதோ அருமையான கவுரமுள்ளதானதுதான் தேவையாயிருக்கிறது என்கிறார்கள். சகோதரனே தேவன் அதை ஏற்றுக்கொள்வது அந்தவிதமான வழியில் அல்ல. அது அப்படி அல்ல ... நான் இரத்தத்தைக் காணும்போது, நான் கடந்து போவேன். இரத்தம் தேவனுக்கு ஒரே பதிலியாய் உள்ளது. ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது. ஆகவே நீங்கள் அதன் மாம்சத்தைப் புசிக்கலாம், ஆனால் அதிலுள்ள இரத்தத்தையோ அதில் அதன் ஜீவன் இருப்பதால் அதை ஊற்றி விடுங்கள் ஜீவனைப் புசிக்க வேண்டாம். எவ்வளவு அழகாயிருக்கிறது என்று கவனியுங்கள். எப்படியாய் நான் அதைக் குறித்து நினைக்கிறேன். பின்னர், இப்பொழுது ஆதாமே, ஏவாளே வெளியே இங்கே வாருங்கள், உங்களை வெளியே கொண்டு செல்வதற்கு முன்னர், நான் ஏதோ காரியத்தைச் செய்யப்போகிறேன் என்று தேவன் நினைத்தார். எனவே அங்கே குன்றின் பக்கமாகப் போய் ஒரு செம்மறி ஆட்டைக் கொண்டு வந்து அதைக் கொன்று போட்டு அதன் தோலைக் கிழித்தெடுத்து அது மரிக்கும் படியாய் செய்தார். 31ஏனென்றால் நீங்கள் எவ்வளவுதான் நல்ல மனிதனாக இருந்தாலும் சரி, எவ்வளவுதான் நல்ல ஸ்திரீயாக இருந்தாலும் சரி, நீ என்னவாயிருந்தாலும் சரி தேவன் அவருடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டியவராய் இருக்கிறார். அது தேவனாய் இருக்கிறது. தேவன் அவருடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். அந்த காரணத்தினால் தான் கன்னி மரியாள் பெந்தேகொஸ்தே நாளன்று மேலறைக்குச் சென்று மற்றவர்களைப் போன்றே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர் இங்கே ஒரு அழிவுள்ளவளாகப் பிறந்து, பரலோகம் செல்வதற்கு முன்னர் மறுபடியும் பிறக்க வேண்டியதாயிருந்தது, ஆமென். 32இப்பொழுது பாருங்கள். அம்மாளே நான் உங்களுக்குக் கூறுகிறேன். காலங்கள் அப்படியே மாறிப்போயிருக்கின்ற காரணத்தினால் தேவன் மாறிப்போகவில்லை. ஆனால் ஏதும் குறைவுள்ளவளாக நீங்கள் வந்தால், நீங்கள் இழக்கப்பட்டுப் போவீர்கள், புரிகின்றதா! இப்பொழுது இந்த நாளன்று 1900 வருஷங்களுக்கு முன்னர் கல்வாரியில் என்ன செய்தார் என்பதின் சார்பாகத்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். என்னே! ஒரு பலி இதற்குக் கிரயமாக அதுவும் தேவனுடைய வழியில் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது என்பதை உங்களுக்குக் காட்டும்படியாக, நான் பேசிக்கொண்டிருக்கிறேன். செம்மையாய்த் தோன்றுகிற ஒரு வழி அங்கேயிருக்கிறது. ஆனால் தேவனே! ஒரு அளிக்கப்பட்ட வழியை உடையவராயிருக்கிறார். நீங்கள் எப்பொழுதும் தேவனால் அளிக்கப்பட்ட வழியில் செல்வீர்களானால் நீங்கள் ஒருபோதும் தவறாகவே செல்ல மாட்டீர்கள். 33நீங்கள் இந்தியானா போலிஸுக்குப் போக புறப்படுவது போன்று அல்லது அந்த பாலத்தைக் கடந்து போவதனால் நீங்கள் சொல்லுவீர்கள். நல்லது, இங்கே லூயி வில்லியா இங்கே இருக்கிறது. ஆம், நேராக இந்த வழியாகச் செல்வீர்களானால் சீக்கிரமாய் அந்த இடத்தைப்பிடித்து விடலாம் என்று அது உண்மை . நீங்கள் பாதையில் வரைபடத்தை , நீளப்படத்தை எடுத்து அதைச் சற்று ஆராய்ந்து பார்த்து நீங்கள் எந்த வழியாய்ப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று பாருங்கள். அப்படியானால் இதோ இருக்கிறது, தேவனுடைய மகிமைக்குப் போகும் வரைபடம் அதை ஆராய்ந்து பாருங்கள். அதோ அது இருக்கிறது. வழியெல்லாம் இரத்தம் தெளிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் இரத்தத்தைப் பின் தொடர்ந்து சென்றால் உங்களால் பாதை தவற முடியாது ஆமென். இப்பொழுது உங்களால் காணமுடியும் புரிகின்றதா. இரத்தத்தோடு உங்களை நீங்கள் சரியாய் வைத்துக் கொள்ளுங்கள், அப்போது உங்களுடையதெல்லாம் சரியாகிவிடும். ஏனென்றால் பாதையின் ஒவ்வொரு அடியிலும் அங்கே ஒரு இரத்தக் கறை படிந்த அடிச்சுவடு இருக்கின்றது. 34இப்பொழுது கவனியுங்கள். எப்படியாய் தேவன் அந்தநாட்களில் அவர் அதைச் செய்வதற்கு முன்னதாக அவர் நின்றிருக்கலாம் அல்லது அதைப் பெற்றுக்கொள்ள அவர்களும் கூட நின்றிருக்கலாம். அப்பொழுதே அவர், அவர்களைக் கொன்றிருப்பார். அவர் செய்யத்தான் வேண்டும். ஏனென்றால் அவர் ஒப்பற்றவராயிருக்கிறார். அவருடைய வார்த்தையை அவர் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். அதைப் புசிக்கும் நாளிலே நீங்கள் சாகவே சாவீர்கள் என்று கூறினார். அது காரியத்தை என்றென்றைக்குமாய்த் தீர்த்தது. பின்னர் அவர் அந்த செம்மறி ஆட்டைக் கொன்ற போது என்னால் அதை அந்நாளில் செய்கிறதைக் காணமுடிகிறது. அவைகள் செம்மறி ஆடு தானா சகோதரன் பிரன்ஹாம் என்று நீங்கள் கேட்கலாம். நான் அதை விசுவாசிக்கிறேன், உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானது அவர்தான். அது ஒரு ஆட்டுத் தோல், அதை எடுத்து அவைகளைப் புதர்களுக்குப் பின்னாக எறிந்து இவைகளால் உங்களைச் சுற்றிக்கொண்டு பெற்றுக்கொள்ளும்படி வெளியே வாருங்கள் என்று அவர்களிடம் கூறினார். 35ஆதாமும், ஏவாளும் இந்த இரத்தம் தோய்ந்த தொங்கிக் கொண்டிருந்த ஆட்டுத்தோலை அவர்கள் சுற்றிப் போட்டு இழுக்கின்றதை என்னால் காணமுடிகின்றது. அந்த அழகான பரிபூரண, பூரணமான மானிட வர்க்கங்களின் சரீரங்கள் இப்பொழுது இரத்தம் தோய்ந்த ஆட்டுத்தோலினால் சுற்றப் பட்டிருக்கின்றதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர்கள் அங்கே நிற்கிறதைக் காணமுடிகிறது. தேவன், ஆதாமே எனக்கு செவிகொடுப்பதற்கு பதிலாக நீ உன் மனைவிக்கு செவிகொடுத்தபடியால் பின்னர் நான் உன்னை பூமியின் மண்ணிலிருந்து எடுத்தபடியால் நீ பூமியின் மண்ணுக்குத் திரும்புவாய் என்று கூறினார். அவர் ஏவாளே, எனக்கு செவிக்கொடுப்பதற்கு பதிலாக நீ சர்ப்பத்திற்கு செவி கொடுத்தபடியால் ஏன்? நீ ஜீவனைக் கொண்டுவர வேண்டியவள், ஆனால் ஜீவனை உலகத்திலிருந்து எடுத்தாய். நீ உலகத்திற்குள் ஜீவன் கொண்டு வந்தாக வேண்டும். உன்னுடைய வேதனையைப் பெருகப் பண்ணுவேன் உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும் என்று கூறினார். பின்னர் அவர், “சர்ப்பமே நீ இதைச் செய்தபடியால், நிமிர்ந்து நடந்தவன்... அது ஊர்ந்து செல்லும் ஜந்து அல்ல அவன் ஒரு மிருகமாய் இருந்தான். நிமிர்ந்து நடந்தான். பூமியின் மிருகங்கள் எல்லாவற்றிலும் தந்திரமுள்ளவனாய் இருந்தான். அது வேதவார்த்தையின்படியாய் இருக்கிறது. நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருங்கள். ஒரு மனிதனைப் போன்று நிமிர்ந்து நடந்தான். அவன் அவளை வஞ்சித்தான். நீ இதைச் செய்த காரணத்தினால் உன் கால்கள் உனக்கு இல்லாமல் போவதாக. நீ வயிற்றினால் நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் திண்பாய் என்று கூறினார். சரியாக, அங்கேயே அவர்களுக்கு நியாயதீர்ப்பு உண்டாயிருந்தது. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பை காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். ஏனென்றால் அவர் அதைப் பேசி கூறியிருக்கிறார். அவர் தேவனாயிருக்கிறார். அவரால் கூறினதை மீறிப்போக முடியாது. அவர் அதிலேயே இருந்தாக வேண்டும். அவர் ஒரு தேவனாக இருக்கும்படியாக தேவன் அவருடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அது உண்மை . 36ஆகவே, என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. பாவம் அந்த ஏவாள் நின்று கொண்டு ஆதாமை நோக்கி நிற்கும் பொழுது, அவளுடைய கருத்தத் தலைமயிர் அவளுடைய முதுகின் மேல் தொங்கிக் கொண்டிருந்து. அந்த பெரிய பிரகாசமான நீல நிறக்கண்கள் ஆகாயத்தைப் போல் காட்சியளித்தது. தேவன் அவைகளை உண்டாக்கினார். கண்ணீர் வழிந்து ஆடைகளின் மேலிருந்து இரத்தத்தோடு கலந்து ஏவாளின் சரீரத்தைச் சுற்றிலுமாய் சொட்டிக் கொண்டிருந்து. ஆதாம் அவனுடைய பலமான சரீரத்தோடு அவளை அப்படியே பிடித்து அவனுடைய மார்பின் மேல் அவள் குனிந்திருக்கும்படியாய் அணைத்துக்கொண்டான். அங்கே கண்ணீரானது ஒன்று சேர்ந்து கலந்து அப்படியே ஆட்டுத்தோலின் மேல் ஓடி இரத்தமானது சொட்டிக்கொண்டிருந்தது. வழியெல்லாம் இரத்தமாக இருந்தது. அங்கே இப்பொழுது அவர் நீங்கள் என் சமூகத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார். ஏவாளும், ஆதாமும் ஒருவர் இன்னொருவர் கரங்களைச் சுற்றிப்போட்டுக் கொண்டு அந்த பழைய ஆட்டுத்தோலை அவர்களுடைய கால்களின் மேல் அடித்துக்கொண்டு இரத்தம் அவர்கள் கால்களின் மேல் பட்டுக்கொண்டு அவர்கள் இந்த விதமாக அசைந்து போய்க் கொண்டிருக்கிறதை என்னால் காணமுடிகிறது. அதன் பின்னர் என்னால் அந்த ஆகாய வெளியாவற்றையும் காணமுடிகின்றது. (சகோதரன்.பிரன்ஹாம் தன்னுடைய கைகளைச் சேர்த்து ஒருமுறை தட்டுகிறார் - ஆசி) 37அது தேவனாயிருந்தது. தேவன் நாட்களின் துவக்கமும் வருஷங்களின் முடிவும் இல்லாதவர். அவர் என்றென்றைக்குமாய் சதாகாலங்களிலும் இருக்கிறார். பின்னர் என்னால் அந்த மகத்தான ஆகாய வெளியானது ஒன்று சேர்ந்து இப்படியாக அசையத்து வங்குகின்றதை காணமுடிகின்றது. இந்தவிதமாய் அப்படியே கீழாக வந்து ஒரு கூர்நுனி கோபுர வடிவில் தலைகீழாக அப்படியே கீழாக இறங்கி அந்தச் சிறிய ஜோடி ஏதேன் தோட்டத்தின் ஊடாக இரத்தம் தோய்ந்த ஆட்டுத் தோலினால் அவர்களின் கால்களின் மேல் அடித்துக்கொண்டிருக்க அவர்கள் போய்க்கொண்டிருப்பதை தேவன் பார்க்க துவங்கினார். அவரால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது அப்படியே உருகினது. தேவனுடைய இருதயத்தையே உருகச் செய்தது. அன்-பு. தேவன் அவ்வளவாய் அன்பு கூர்ந்தார். அவர்கள் அப்படியாய்ப் போவதை அவரால் பார்க்க முடியவில்லை. அவர் அவர்களை திரும்ப அழைத்து, நான் உன்னுடைய வித்திற்கும், சாத்தானின் வித்திற்கும் பகை உண்டாக்குவேன் என்றார். பின்னர் அந்தக் காரியம் எப்பொழுது செய்யப்பட்டது. தேவன் தாமே ஒரு ஸ்திரீயின் மூலமாக ஒரு கன்னிப்பிறப்பின் மூலமாக கீழே வந்தபோது அது கல்வாரியில் செய்யப்பட்டது. 38இன்னும் சிறிது ஏதேனிலேயே இடைப்பட நான் எவ்வளவாய் விரும்புகிறேன், கவனியுங்கள். தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட போது மீறுதலின் நிமித்தமாக அனுப்பப்பட்டனர் சகல ஆசீர்வாதங்களும் மீறுதலின் காரணமாக துண்டிக்கப்பட்டு விட்டது. சபையோடு காரியம் அப்படியாகத்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சகல ஆசீர்வாதங்களும் மீறுதலின் காரணமாக துண்டிக்கப்பட்டு விட்டது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். 39இன்னும் சிறிது ஏதேனிலேயே இடைப்பட நான் எவ்வளவாய் விரும்புகிறேன், கவனியுங்கள். தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட போது மீறுதலின் நிமித்தமாக அனுப்பப்பட்டனர் சகல ஆசீர்வாதங்களும் மீறுதலின் காரணமாக துண்டிக்கப்பட்டு விட்டது. சபையோடு காரியம் அப்படியாகத்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சகல ஆசீர்வாதங்களும் மீறுதலின் காரணமாக துண்டிக்கப்பட்டு விட்டது. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். 40இன்றைக்கு வாசலைக் காக்கிறதும் அதுவேதான்.. நீங்கள் பரிசுத்த ஆவிக்கும் அக்கினிக்கும் பயப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் ஒருபோதும் உள்ளே பிரவேசிக்க மாட்டீர்கள். தேவனுடைய பட்டயம் உக்கிரமானது. அந்த மரத்தைக் கவனித்துக் கொண்டும் ஜீவ விருட்சத்தை பாதுகாத்துக் கொண்டும் தேவன் ஒரு பற்றி எரிகிற அக்கினியாயிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். அப்படியானால் இது ஒரு அழகான காட்சியாய் இருக்கும். ஓ, என்னே! ஆதாம் இல்லை காயீனும் ஆபேலும் கஷ்டப்பட்டு இப்போது உழைத்து கொண்டு அல்லது ஒரு பலியை செலுத்தும்படியாய் வெளியே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறதை என்னால் காணமுடிகின்றது. அவர்கள் அவர்களுடைய பலிபீடங்களில் சரியாக அந்த வாசலண்டை அவர்கள் அங்கே சிங்காசனத்தண்டை ஆராதிக்கதக்கதாக கட்டியிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். 41கவனியுங்கள். இதோ வருகிறான் காயீன். பெரியதான ஆப்பிளை, பெரியதான பரங்கிக்காயைப் பெற அவன் வருஷ முழுவதுமாய் ஒருக்கால் வேலை செய்திருக்கலாம், அவனிடத்தில் உள்ளவைகளை வாசலண்டை கொண்டு வந்தான். அங்கேயே வாசலுக்கு பக்கத்திலேயே தேவனுடைய பிரசன்னத்தில் தனக்கென்று ஒரு பலிபீடத்தை எழுப்பினான். அவனுடைய எல்லாப் பழவகைகளையும் அழகான லீலிப்புஸ்பங்களையும், எல்லாக் காரியங்களையும் கொண்டு வந்து அவைகளை பலிபீடத்தின் மேல் சரியாக வைத்து அதன் பின்னர் முழங்காற்படியிட்டு தேவனை ஆராதித்தான். இதற்கு முன் இவ்விதமாக இது இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் நன்றாக ஊறியிருக்குமென்று நான் நம்புகிறேன், பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். சபைக்குப் போனால் மட்டும் போதுமென்று தேவன் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார் என்றால் ஆபேலைப் போன்றே காயீனும் அவ்வளவு நீதியுள்ளவனே. காயீன் கர்த்தருக்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டினான். நீங்கள் சொல்லலாம் சகோதரன் பிரன்ஹாம், நான் அதைச் செய்கிறது மட்டுமல்லாமல், நான் ஒரு பலியையும் செலுத்துகிறேன், நான் அயல்நாட்டு ஊழியங்களுக்குக் காணிக்கை அனுப்புகிறேன் என்று. அந்தக் காரியங்கள் எல்லாம் நல்லதுதான். அவைகளெல்லாம் சரிதான். ஆனால், தேவன் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறார். காயீன் அவனாகவே அதைச் செய்தான். அவன் ஒரு பலியைக் கொண்டு வந்தான். அவன் கர்த்தரைத் தொழுது கொண்டான். அவன் முழங்காற்படியிட்டு ஸ்தோத்திரங்களை கர்த்தருக்கு ஏறெடுத்து கர்த்தாவே! இதோ நான் இருக்கிறேன், இதோ நான் இருக்கிறேன், நான் உமக்கு ஒரு பலியைக் கொண்டு வந்திருக்கிறேன். நான் உமக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக் கிறேன், ஆமென் என்றான். அத்தனை வார்த்தைகளில் ஒரு சபையில் நான் அங்கத்தினனாக இருக்கிறேன். அது ஆழத்தைத் தொட்டதா? கவனியுங்கள். நான் ஒரு சபையின் அங்கத்தினன். நான் உம்மில் விசுவாசமாயிருக்கிறேன். அது இப்பொழுது அடிவரைக்கும் செல்லும். அது உண்மையாகவே ஆழத்தில் போய் ஊறட்டும். நான் தேவனில் விசுவாசமாயிருக்கிறேன், நான் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறேன், நான் ஒரு பலியைக் கொண்டு வந்திருக்கிறேன். இதோ நான் இருக்கிறேன் கர்த்தாவே! நான் உம்மை ஆராதித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் அதற்கு அவருடைய முதுகைக் காட்டினார், சரியா?. 42ஈஸ்டர் காலையன்று இந்தப் பட்டணத்தில் போதகர் ஒருவர் கூறினது போன்று, ஈஸ்டர் காலையன்று, பிரசங்கியாரே! நான் என்ன செய்கிறேன் என்று உமக்குத் தெரியுமா என்றார். அதற்கு நான் என்ன? என்றேன். அவர் என்னுடைய ஆட்களுக்கு நான் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துதலைக் கூறிவிடுவேன் என்றார். நான் ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர் இதற்குப் பின்னர் அடுத்த ஈஸ்டர் வரைக்கும் அவர்களை நான் காணமாட்டேன் என்றார். ஈஸ்டர் அன்று எல்லாரும் வெளியே வருவார்கள். புது தொப்பிகளும், புதிய ஆடைகளும் வாங்குவதற்கு வருவார்கள். அதற்கும் கிறிஸ்துவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஓ, நாளைய தினத்தன்று பிராடஸ்டென்டுகள் ஆதிக்கத்தில் லீலி புஷ்பங்கள் பெரியதான அழகான லீலி புஷ்பங்களைக் கொண்டு பீடத்தண்டை வைப்பார்கள். ஆக, அதற்காக இந்த வருஷம் இலட்சக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப்படும். தேவன் பீடத்தில் லீலிபுஷ்பங்கள் இருப்பதைக் குறித்து அக்கறைக் கொள்ள மாட்டார். நீங்கள் பீடத்தின் மேல் இருக்கவே அவர் விரும்புவார். அது லீலி புஷ்பம் அல்ல, அது உன்னுடைய பலி அல்ல, பலிபீடத்தின் மேல் வைக்கப்படவேண்டியது நீயாக இருக்கின்றாய். அதுதான் வித்தியாசம். தேவனுக்குத் தேவையானதை பீடத்தின் மேல் வைக்க வேண்டும், அது நீயாக இருக்கின்றாய். 43இப்பொழுது எப்படியாய், அந்த கூர் பாங்கானது, அதாவது சாத்தானிலிருந்து எப்படியாய் காயீனுக்குள் வந்தது என்பதை கவனிக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன். இது நிச்சயமாக உங்களுக்கும், வழிப்போக்கராயும், புனித யாத்திரையிலும் இருக்கின்ற அவர்களில் சிலருக்கும் இரு நல்லுணர்வை உண்டாக்க வேண்டும். நம்மால் இதையும் அதையும் நம்முடைய சபையில் செய்தால் நன்றாய்தான் இருக்கும் என்று ஒருக்கால் நாம் சொல்லவேண்டியதாய் இருக்கும். திருப்தியாயிருங்கள் அல்லேலூயா! ஒரு பெரிய விசேஷ ஆலயத்தில் தேவனில்லாமல் ஆராதிப்பதைக் காட்டிலும் பின் பக்கத்திலுள்ள நடைபாதையில் தேவன் இருக்க, அங்கே அவரை ஆராதிப்பதையே நான் விரும்புவேன். அது உண்மை , நிச்சயமாக. அங்கே அவன் ஏழை மனிதனாக இருந்தான் கவனியுங்கள். அதன்பின்னர் அவனுடைய பலியை, காயீன் கொண்டு வந்தான். அதை அங்கே அதன் மேல் வைத்தான். இப்பொழுது கவனியுங்கள், அவன் சாத்தானின் வழிவழியாக வந்தவன். ஏனென்றால் தேவன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தான். காரணம், அது ஒரு அழகான பழமாக இருந்தது. அவன் தானே, செய்ததான ஏதோ காரியமாக அது இருந்தது. 44அநேக ஜனங்கள், நான் இந்த வித்தியாசமான ஒழுங்குகளைச் சேர்ந்தவன், நான் செஞ்சிலுவை சங்கத்திற்குக் கொடுக்கிறேன். நான் தர்ம காரியங்களுக்குக் கொடுக்கிறேன். நான் சபைகளுக்கு நன்கொடை கொடுக்கிறேன். அதைக்குறித்து என்ன சொல்கிறீர் சகோதரன். பிரன்ஹாம் எனக் கேட்கிறார்கள். அதெல்லாம் சரிதான். ஆனால், ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான். அதைக் கவனியுங்கள். அந்த தர்மகாரியங்கள் எல்லாம் நல்லதுதான். இருந்தாலும் அது தேவனுடைய அளிக்கப்பட்ட வழி அல்ல. காயீன் அவனுடைய சொந்த வழியில் வந்தான். அநேகரெ இன்றிரவு அவர்களுடைய சொந்த வழியில் வந்து கொண்டிருக்கின்றனர். 45உங்களால் அதை விசுவாசிக்கவும் முடியாது ஏன்? உங்களுடைய விவாதங்கள் தகுதியானவைகள் அல்ல, அதை விவாதித்து, தீர்க்க நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. உங்களால் அதை விவாதிக்கக் கூடுமானால் அதற்குப் பிறகு அது விசுவாசமாயிருக்க முடியாது. நீங்கள் அதை விசுவாசத்தினால் தான் செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரன்ஹாம் நீர் என்ன சொல்லுகிறீர் நானும் அங்கே வந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு மற்றவர்களெல்லாம் செய்கின்றபடியெல்லாம் செய்ய வேண்டும் என்றா?” எனச் சொல்லலாம். மற்றவர்களோடு கூட நீங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தால் நீங்கள் அப்படிச் செய்யுங்கள் அவ்வளவுதான். ஆம், ஐயா அவ்வளவு தான். நீங்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். நாகமானுக்குக் காரியம் அதேவிதமாகத்தான் இருந்தது. தேவன் தீர்க்கதரிசியினிடத்தில் போய் ஏழுமுறை முழுக வேண்டு மென்று அவனிடம் கூறு என்று சொன்னார். இந்தத் தண்ணீர் அதைக்காட்டிலும் மேலானதாயும், சுத்தமானதாயும் இல்லையே என்று கூறினான். ஆனால் அதுவோ, யோர்தானின் அந்தத் தண்ணீராய் இருந்தது. சில நேரங்களில் மிகவும் மோசமாய் இருக்கிறது. 46ஆனால் 1900 வருஷங்களுக்கு முன்னர் தேவன் என்ன ஒரு கிரயத்தைச் செலுத்த வேண்டியதாயிருந்தது என்பதை நீங்கள் எல்லோரும் இன்றிரவு கல்வாரியை நோக்கிப் பார்க்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி கர்த்தரால் அசட்டைப் பண்ணப்பட்ட சிலருடைய வழியை நான் எடுத்துக் கொள்வேன் என்று கூறுங்கள். நான் பரிசுத்த உருளை என்று சகோதரன் டாம் அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்களே! அப்பேர்ப்பட்டவர் களோடு சேர்ந்துக்கொள்ள வேண்டுமென்று நீர் கூறுகிறீரா? சகோதரனே நான் ஏறக்குறைய மூன்று முறை உலகத்தையே சுற்றி வந்திருக்கிறேன். இன்னமும் நான் ஒரு பரிசுத்த உருளையைக் காணவேயில்லை, இல்லை ஐயா. நான் பரிசுத்தக் கூட்டத்தாரைப் பார்த்திருக்கிறேன். நான் பரிசுத்த உருளைகளைப் பார்க்கவில்லை. அது சபையின் மேல் ஒட்டப்பட்டிருக்கிற பிசாசின் அட்டையாயிருக்கிறது. பரிசுத்தமில்லாமல் தேவனை ஒருவனும் தரிசிக்க முடியாது என்று தேவன் சொன்னார். அதைக்குறித்து நீங்கள் உங்களைத்தானே நீங்கள் பொருத்திக் கொள்ளலாம். அது தேவனுடைய வழியாயிருக்கிறது. 47கூச்சலிட்டும், சத்தம் போட்டும், அந்தவிதமாய் இருக்கின்ற ஜனங்களையா நீர் கூறுகின்றீர் எனலாம். சகோதரனே, அதுதான் அதுவாக இருக்கிறது. ஏன் அது எனக்குப் பைத்தியமாய்த் தோன்றுகிறது என்று கூறலாம். அந்தக் காரணத்தினால்தான் நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் மறுபடியுமாய் பிறந்திருந்தால் அப்பொழுது அது பைத்தியமாய் இருக்காது. நீங்கள் எங்களோடு இருப்பீர்கள். ஒரு சமயம் நீங்கள் செய்தது போலவே. அவர்களும் நினைத்தார்கள். அவர்கள் தாமே அதைப் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் நீங்கள் செய்தது போலவே அவர்களும் நினைத்தார்கள். அது ஒரு மாற்றமாக இருக்கிறது. ஒரு மனமாற்றமாயிருக்கிறது. மாற்றம் என்பதன் அர்த்தம் எந்தக் காரியத்தையும் மாற்றுதல் என்பதாகும். ஒரு மனிதன் தனக்குத்தானே மரிக்கவில்லை. கர்த்தாவே, அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. என்னை உள்ளே எடுத்துக் கொள்ளும் என்று கூறுவதாகும், ஆமென். அப்பொழுது தேவன் அதைச் செய்வார். புரிகின்றதா!. 48இப்பொழுது காயீன், நான் இவைகளையெல்லாம் இங்கே வைத்து விட்டேன் என்றான். தேவனோ அதை நிராகரித்துவிட்டார். அவன் அதையெல்லாம் நன்றாக வைத்தான். ஒருவேளை நீங்கள், நான் சூரிய உதய ஆராதனைக்குப் போகிறேன், நான் புதிய தொப்பியை வாங்கியாக வேண்டும் என்று கூறலாம். என்னுடைய கூட்டத்தில் ஒரு பெண் பாடப் போவதாயிருந்தாள் அவள் என்னிடத்தில் சகோதரன் பிரன்ஹாம். அவளுடைய தாயானவள் ஜீவனத்திற்காக வேண்டி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள், தலையில் வைத்துக் கொள்வார்களே கின்கிங் அது ஒன்று அவளுக்குத் தேவை யாயிருந்தது உங்களுக்குத் தெரியுமே, அது என்ன. நகங்களை அழகுபடுத்துவதா அல்லது அந்தக் காரியத்திற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள், தலையில் வைத்துக்கொள்வார்களே, நான் சொல்வது தவறு என்று எனக்குத் தெரியும். அது எனக்கு ஞாபகத்தில் வரவில்லை . அதைக்குறித்து எனக்கு அதிகம் தெரியாது. டூனியா? (சபையார் - இல்லை , பெர்மனென்ட்) பெர்மனென்ட் அதிலிருக்கிறது, அதுதான் அது. பாடல் குழுவில் பாடுவதற்கு முன்னர் அதில் ஒன்று அவள் தலையில் இருக்க வேண்டும். அவளுடைய தாயோ ஜீவனத்திற்காக துணிகள் துவைக்கிறாள். அவள் போய் அந்த பெர்மனென்ட்-ஐ தனக்கு வாங்கிக்கொண்டு பாட வந்தாள். நான், உன்னைப் பாட அனுமதிக்க மாட்டேன் என்றேன். அவள் அதைச் செய்தபடியால், அவள் பாடுவதற்கு தகுதியற்றவளானாள். சரிதானே. 49பிரசங்க பீடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தேவன் உதவி செய்வாராக. எப்படியிருந்தாலும் இன்றைக்கு உலகத்தோடு காரியங்கள் அவர்களுடையதில் அப்படியாய்த்தான் இருக்கிறது. கவனியுங்கள். சகோதரனே, எனக்கு அந்த பழைய மாதிரியான சாசபரஸ் அனுபவம்தான் பிடிக்கும். அங்கே, அக்காலத்தில் புதர்களில் எல்லாவித கசப்பான வேரையும் தேய்த்து எடுத்துவிட்டு பூமியை நன்றாகக் கலக்கி விட்டு அது உண்மை , பின்னர் விதை விதைப்பார்கள். இப்பொழுது கவனியுங்கள். காயீன் அந்த அழகை நினைத்தான். அவர்களோ இப்பொழுது நம்முடைய சபை.... நாம் ஒரு புதிய சபையைக் கட்டுவோம் என்கிறார்கள். அதெல்லாம் சரிதான். எல்லாக் காரியங்களும் அழகைப் பற்றினதாய் இருக்கிறது. அதெல்லாம் சரி. நீங்கள், கர்த்தராகிய இயேசுவை அதனோடு கொண்டு போனால் அதெல்லாம் சரி. பின்னர் நீங்கள் அவரை முதன்மையாய் வைத்தால், அவர் மீதியுள்ள எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். யாரோ ஒருவர் சகோதரன் பிரன்ஹாம் இந்தவிதமாய் காட்சியளிக்கின்ற இந்தப் பெண், பீடத்தண்டை வரவேண்டு மென்று நினைக்கிறீரா என்று கேட்டார். 50நான் சொன்னேன், சகோதரனே, வந்து கொண்டிருக் கின்றது இலையுதிர் காலமாய் இருக்கின்றது. இங்கே காணப்படு கின்றன அந்த காய்ந்து போன அவையெல்லாமும் அங்கே இருக்கின்ற அவை ஒவ்வொன்றும் அவைகளெல்லாம் போன வருடம் வந்தவைகள். ஆனால் புதிய இலைகள் வரும்படியாய் அந்த இலைகளைப் பிடுங்கிப்போட வேண்டியதில்லை, புதிய ஜீவன் வரும்படியாய் அப்படியே விடும். பழைய இலைகள் அப்படியே தானாய் உதிர்ந்து போம் என்றேன். அது உண்மை, ஆமென். கவனியுங்கள். நான் இதையும் கூட சொல்வேனாக. பழைய இலைகள் கீழே விழவில்லையென்றால் புதிய ஜீவன் வரவில்லை என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது என்மேல் கோபப்படவேண்டாம். 51நான் இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். அதன் நிமித்தமாக நம்முடைய பரலோகப் பிதாவுக்கு என்ன கிரயமாயிற்று என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது அவர் என்ன செய்தார் என்பதைப் பாருங்கள். அதோ காயீன் அங்கே வந்து அவனுடைய பலியைச் செலுத்தினான், அவன் ஆராதித்தான். அவன் சபைக்குச் சென்றான். அடுத்தவனைப் போன்றே இவனும் அவ்வளவு நல்லவனாக இருந்தான். ஏசா அவ்வண்ணமாகவே இருந்தான். ஏசா அவனுடைய குணநலன்களில், யாக்கோபைக்காட்டிலும் மேலான ஒருவனாயிருந்தான். ஒரு கண்ணியமானவனாயிருந்தான். அவனுடைய தகப்பனை, அவன் செய்த காரியங்களையும் நேசித்தான். ஆனால் தேவனோ, யாக்கோபைத் தெரிந்து கொண்டார். 52இப்பொழுது கவனியுங்கள். ஆபேல் தன்னுடைய பலியைச் செலுத்த வரும்பொழுது அது முற்றிலும் ஒரு வித்தியாசமானதாய் இருந்தது. இதோ வருகிறான் ஆபேல். அவன் வேலை ஒன்றும் செய்யவில்லை. தான் பங்கு பெறுவதற்காக நகரத்திலுள்ள பெரிய சபையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. கலந்துகொள்ள மிக அருமையான கூட்டம் எங்கு இருக்கிறது என்று அவன் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை, ஆமென். அவனிடத்திலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான். அவ்வளவுதான். அவன் ஒரு ஆட்டு மந்தையை மேய்ப்பவனாக இருந்தான். எனவே தன் கரத்தை நீட்டி ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டினான்.... அந்த நாட்களில் அவர்களுக்குக் கயிறுகள், துணிகறைகள் இருந்திருக்காது. எனவே திராட்சைக் கொடியைக் கொண்டு வந்து அதன் கழுத்திலே சுற்றியிருந்த வண்ணமாக இழுத்துக் கொண்டு வந்தான். ஆனால் அது எதைப் பாவனையாய்ப் பேசுகிறது. அவர்கள் அவரை கல்வாரிக்குக் கொண்டு போனார்கள். அவர்தான் செம்மறி ஆட்டுக்குட்டி. அவர் ஏன் ஒரு தொழுவத்தில் பிறக்க வேண்டும், ஆட்டுக்குட்டிகள் வீடுகளில் பிறப்பதே இல்லை, அவைகள் தொழுவத்தில் பிறக்கின்றன. ஒரு ஆட்டுக்குட்டியைப் போன்று அடிக்கப்படுவதற்கு அவர்கள் வழி நடத்திக் கொண்டு சென்றனர். அவர்கள் அவரைப் புறம்பே கொண்டு போனார்கள். அவரைக் கல்வாரிக்கு மேலே வழிநடத்திக் கொண்டு போனார்கள். அவர் உலகத் தோற்றம் முதற்கொண்டு தேவனுடைய ஆட்டுக்குட்டியாயிருந்தார், ஆமென். நான் அதை நினைக்கையில் அதோ வருகிறது ஆபேலின் சிறிய ஆட்டுக்குட்டி. அதோ வருகிறது தேவனுடைய ஆட்டுக்குட்டி. 53நான் அதை நினைக்கையில் என்னுடைய இருதயம் அப்படியே மேலும், மேலும் புரளுகிறது. நான் சிந்தித்துப் பார்க்கும் போது, நான் ஒரு ஏழை, தகுதியற்றவன் தேவபக்தியற்ற பாவி, தேவனில்லாமல், கிறிஸ்து இல்லாமல் எந்த நம்பிக்கையும் இல்லாதவனாக இந்த உலகத்தில் மரித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய பார்வையில் நான் ஏற்றுக்கொள்ளப்படும்படியாக அழகான ஒன்று அசட்டை செய்யப்பட்டதும், புறக்கணிக்கப் பட்டதுமாய், ஏற்ற காலத்திலே என் பதிலியாக கிறிஸ்து மரித்தார். எனக்குப் பதிலாக. ஓ, என்னால் அதைத்தாண்டிப் போக முடியவில்லை. அவர் எப்படி எனக்காகச் செய்யமுடியும். அதை யூகித்துப் பார்க்கவே முடியவில்லை . நான் யார்? அப்படியிருந்தும், நீங்கள் அவர் இதை உனக்காக செய்தாரா என்கிறீர்கள், ஆம். ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் என்னை தேடிக் கண்டுபிடித்து, அவர் அதை எனக்காக செய்தார் என்று கூறினார். நான் அவரை விசுவாசித்தேன், நான் அவரை விசுவாசித்தேன் ஆம் ஐயா. நான் அவரை ஏற்றுக்கொண்டு காரியம் அப்படியாகத்தான் இருக்கிறது என்று கண்டறிந்தேன். அவர்கள் மத வைராக்கியம் உள்ளவர்கள் அல்லது அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்று ஜனங்கள் கூறியிருந்தாலும் சரி, எனக்கு அக்கறையில்லை. நான் தேவனை விசுவாசித்தேன், அவர் என்ன கூறினாரோ அதையே செய்தார். 54என்னால் சிறிய ஆபேலைப் பார்க்க முடிகின்றது. இப்பொழுது கவனியுங்கள். ஆபேல் போய் சிறிய திராட்சைக் கொடியைக் கொண்டு வந்து கைநீட்டி, ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியை, தாயின் முதலீற்றைப் பிடித்து கழுத்திலே அந்தக் கொடியைச் சுற்றி இதோ அதை இழுத்துக் கொண்டு வருகிறதை என்னால் காணமுடிகிறது. அங்கே அதைப் பார்ப்பதற்கு அழகு ஏதுமில்லை, இருக்கிறதா? அதுவரையிலு மாய் அதை இழுத்துக் கொண்டு வருகிறான். பின்னர் அதைப் பாறையண்டைக்குக் கொண்டுப் போய் அந்த கிழக்கு கோடி வாசலண்டையில் கிடத்தினான். இப்பொழுது கவனியுங்கள். 55காயீன் ஒருக்கால் வருஷம் முழுவதுமாக கஷ்டப்பட்டு அவனால் முடிந்த மேலான விளைச்சலைச் செய்து தேவன் அதில் பிரியமாயிருப்பார் என்று கருதிக்கொண்டு வந்தான். அநேக ஜனங்கள் நான் பொய் சொல்வதை விட்டுவிடப்போகிறேன், நான் திருடுவதை விட்டுவிடப்போகிறேன், நான் புகைப்பதை விட்டு விடப்போகிறேன், நான் ஒரு நல்ல தரமான ஜனமாய் மாறப்போகிறேன், நான் ஒரு நல்ல சமூதாயத்திற்குள்ளாகப் போகிறேன் என்று கூறுகிறார்கள். இதோ அது இருக்கிறது. நீங்கள் புதிய பக்கத்தைத் திருப்பப் போவதைக் குறித்து தேவனுக்கு அக்கறையில்லை. உங்கள் இருதயத்தைத் திருப்பி அவர் உங்களை மாற்றும்படி அனுமதிப்பதை அவர் விரும்புகிறார். உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அல்ல நற்கிரியைகளினால் இரட்சிக்கப்படுவது இல்லை. ஆனால் அவருடைய கிருபையினாலே, நாம் வாங்கப்பட்டோம். எந்த மனுஷனும் பெருமை பாராட்டாதபடி அது கிரியையினால் அல்ல, ஏனென்றால் நான் என்னவாயிருக் கிறேன் என்பதைப் பொறுத்தல்ல அது, நான் என்ன செய்கிறேன் என்பதைப் பொறுத்ததல்ல அது, என்னுடையது என்பதல்ல அது அது கிறிஸ்து தேவனுக்குள்ளாக எனக்காகவும், உனக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்பதே அதைப் பொறுத்ததாய் இருக்கிறது. 56கவனியுங்கள், அழகான பாவனை. அந்தச் சிறிய ஆட்டுக்குட்டியை இழுத்துக் கொண்டு இங்கே அவன் வருகிறான். வழியெல்லாம் அதை இழுத்துக் கொண்டு வருகிறான். என்னால் யூகித்துப் பார்க்க முடிகிறது. அந்தச் சிறிய ஆட்டுக்குட்டி, எதை நெருங்குகிறது என்று அறிந்திருக்கலாம். அதனுடைய சிறு கால்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்து சிலுவையை இழுத்துக் கொண்டு வருவது பரிபூரண ஒரு மாதிரியாயுள்ளது. தேவனுடைய ஆட்டுக்குட்டியானது எருசலேமின் ஊடாக விழுந்து கொண்டும் பலவீனமாயும் வந்து கொண்டு இருந்தது. இதோ அந்த சிறிய ஆட்டுக்குட்டியானது, சத்தமிட்டுக் கொண்டே வந்தது. அந்தப் பெரிய பாறையண்டை அவனைக் கொண்டு வந்ததும் அதை அந்தப் பாறையின் மேல் கிடத்தி ஒரு கூரான கல்லையெடுத்துக் கொண்டு... எனக்குத் தெரியாது, நான் யூகிக்கிறேன், அந்த நாட்களில் அவர்களுக்குக் கத்திகள் கிடையாது அதன் கழுத்தைப் பிடித்து, இழுத்து அந்தக் கல்லை எடுத்து அதனுடைய தொண்டையை வெட்டத் துவங்கினான். அந்தக் கல் அதன் தொண்டையின் ஊடாக அடிக்கத் துவங்கியது. அந்தப் பாறையின் மேல் அந்த ஆட்டுக்குட்டி மரித்தது. இரத்தம் கசிந்து ஓடிக்கொண்டு, அது சத்தமிட்டுக் கொண்டும் இரத்தம் பீறிட்டுக் கொண்டும், இரத்தம் பீறிட்டுக் கொண்டும், இரத்தம் தெளித்த வண்ணமாக இருதய இரத்தத்தமனிகள் உடைந்து, எல்லா இடத்திலும் இரத்தம் சிதறியது. அதனுடைய வெள்ளையான ரோமமெல்லாம் இரத்தத்தினால் குளிப்பாட்டப்பட்டு சிவப்பாக இருந்தது. தேவன் பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப் பார்த்து அதுதான் காரியம். இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா! அதுதான் வழி என்றார். அதனுடைய சிறிய நரம்புகளிலிருந்து இரத்தம் பீரிட்டு வந்தது. 57அது என்னவாக இருந்தது. 1900 வருடங்களுக்கு முன்னர் இந்த பிற்பகல் வேளையிலே தேவனுடைய குமாரனைப் பற்றினதாயிருக்கிறது. சிறையிலிருந்து அவர் கொண்டு போகப்பட்டார். அவர் நியாயசனத்திற்கு முன்பாக கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து வாரினால் அடிக்கப்படும்படி கொண்டு போகப்பட்டார். அங்கிருந்து கொல்கதாவிற்கு குன்றின் மேல் இழுத்துக் கொண்டு போகப்பட்டார். அவர் சிலுவையை சுமந்து கொண்டு போக சிரேனியா ஊரானாகிய சீமோன் அவருக்கு உதவி செய்தான். காலங்களாய் இருந்த கன்மலையின் மேல் மரித்தார். அவருடைய சரீர வஸ்திரங்களை உரிந்து கொண்டார்கள். அல்லேலூயா! பரிகாசம் செய்த சேவகர்கள் வாயிலிருந்த எச்சிலை அவருடைய முகத்தின் மேல் உமிழ்ந்தனர். அவரோ! என் ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரிய தானால், நான் பிதாவை வேண்டிக்கொள்வேன் அவர் பன்னி ரெண்டு லேகியோன்களுக்கும் அதிகமான தூதர்கள் வந்து எனக்காகப் போராடுவார்கள். ஆனால் இது என்னுடைய ராஜ்ஜியம் அல்ல என்றார். ஆனால் உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. அது இங்கே வெகு சீக்கிரத்தில் இருக்கும். உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. ஓ, என்னே! 58ஒரு சமயம் பில்லி சண்டே அவர்கள் ஒவ்வொரு மரத்திலும் ஒரு தூதன் உட்கார்ந்து கொண்டு அவர் மட்டும் கரத்தை இழுத்து விரலை சுட்டிக் காட்டினால் போதும் அவர் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான் நாங்கள் இங்கே காரியத்தையே முடித்துவிடுவோம் என்று கூறினார்கள் என்று அவர் சொன்னார். என்னே! அது உண்மையா? இல்லையா? காய்பா அப்படிப் பக்கமாய்ப் பார்த்து இவன் மற்றவர்களை இரட்சித்தான். தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ள திராணியில்லை என்று கூறினான். அவருக்குக் கொடுக்கப்பட்ட புகழுரைகளில் அது மிக மகத்தானதாய் இருந்தது. அவர் மட்டும் அவர் தன்னை இரட்சித்துக் கொண்டிருந்தால், அவரால் மற்றவர்களை இரட்சித்திருக்க முடியாது. எனவே மற்றவர்களை இரட்சிக்கும்படியாக அவருடைய ஜீவனை அவர் கொடுத்தார். அல்லேலூயா! ஆமென். நாமெல்லோரும் ஆடுகளைப்போல வழி தப்பித்திரிந்தோம், தேவனோ நம்மெல்லோருடைய அக்கிர மத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார். அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயை திறவாதிருந்தார். இருப்பினும் நம்முடைய மீறுதலினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். அந்த இணையற்ற அன்பை எப்படிப் புறக்கணிக்க முடியும். ஏழ்மையான குன்றின் பக்கமாக மேலே தள்ளாடிக்கொண்டு அவர் போகிறதை காணக்கூடியவராக இருந்தார். அவர் போகிறார். 59அன்றொரு நாள் அந்த புலவன் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு கணத்தோற்றத்தை அவன் கண்டு இதை எழுதினான். என்னுடைய இரட்சகர் அவருடைய தலையைச் சாய்த்து மரித்தார், பாறைகள் பிளந்தது, வானங்கள் இருண்டது, பரலோகத்தின் சந்தோஷத்திற்கும், முடிவில்லாத நாளுக்கும் திறக்கப்பட்ட திரையானது வழியை வெளிப்படுத்தினது. என்னே ! ஒரு இரட்சகர்! ஓ, என்னே ! எப்படி நம்மால், எப்படி என்னால், எனக்கும் உங்களுக்கும் அப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்த ஒருவருடைய அந்த இணையற்ற அன்பை தள்ளிவிடமுடியும். 60என்னுடைய சகோதரனே, சகோதரியே இன்றிரவு நீங்கள் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன், அது தானே தேவனுடைய அளிக்கப்பட்ட வழியாயிருக்கிறது. அதுதான் உனக்குள்ள வழியாயிருக்கிறது. உன்னோடு ஏதாவது காரியத்தை செய்யக்கூடுமானால் அது அவர் ஒருவரால் மட்டுமே கூடும். அந்த ஒருவர்தான் உன்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டார். அந்த ஒருவர்தான் இன்றிரவு ஒரு உயிர்த்தெழுந்த மீட்பராக பிதாவின் வலது பாரிசத்தில் நின்று கொண்டிருக்கிறார். இந்த கட்டிடத்தில் ஒவ்வொரு பாவியையும் அவரிடத்தில் வரும்படியாய் , கெஞ்சிக் கொண்டும் வேண்டிக்கொண்டும் உங்களை இன்றிரவு பார்க்கிறார். நீங்கள் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஈஸ்டர் கடந்து போகும்படியாய் விடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் பாதையின் முடிவிலே இருக்கிறோம். அருமையான நண்பர்களே! நாம் பாதையின் முடிவிலே இருக்கிறோம் என்று என்னுடைய முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். நாம் பாதையின் கடைசி முடிவானதிலிருக் கிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! இன்றிரவு அவரும், உங்களை அவருக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாய் ஆக்க வேண்டுமென்பதே என்னுடைய ஜெபமாய் இருக்கிறது. அவர் தாமே உங்களை வழிநடத்துவாராக. ஒரு சமயம் இரவு... 61ஒரு சமயம் அங்கே ஒரு வயதான, குருடான மனிதன். பெயர் பர்த்திமேயு என்பவன் இருந்தான் என்று வேதத்தில் பார்க்கிறோம். வயதான பர்த்திமேயுக்கு இரண்டு புறாக்கள் இருந்ததாம். சரித்திரத்தில் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சிறிய புறாக்கள் அவனுக்கு முன்பாக ஒன்றுக்கொன்று சில பல்டிகளைப் போடும். அதைப் பார்க்கிற ஜனங்களிடத்தில் அவன் கிண்ணத்தை நீட்டுவான். அந்த பக்கமாய் போகிற ஜனங்கள் நின்று அதைப் பார்த்து அந்த வயதான குருட்டு பிச்சைக்காரனுக்கு காசுகளைப் போடுவார்கள். அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவனுடைய ஜீவியத்தில் அந்தப் பெண் குழந்தையை அவன் பார்த்ததேயில்லை. அவளுக்கு சுமார் பன்னிரெண்டு அல்லது பதினான்கு வயதிருக்கும், அந்தக் கட்டத்தில், நாம் இப்பொழுது அவனுடைய ஜீவியத்திற்குள் பிரவேசிக்கிறோம், அவள் அங்கே உட்கார்ந்திருக்கிறாள். ஒரு இரவு அவனுடைய சிறு பெண் வியாதியானாள். அவன் கர்த்தரிடம் அணுகினான். அவன் கர்த்தாவே, நீர் என்னுடைய சிறு பெண்ணைச் சுகப்படுத்துவீரானால், நாளைக்கு நான் என்னுடைய இரண்டு புறாக்களையும் உமக்குப்பலியாய் செலுத்துவேன் என்று கூறினான். கர்த்தர் அந்தச் சிறு பெண்ணை சுகப்படுத்தினார் அவன் அந்த இரண்டு புறாக்களையும் பலியாகச் செலுத்தினான், அதன் பிறகு அவனுடைய...... இப்போது இன்றைய நாளிலே குருட்டு மனுஷர்களை ஒரு நாய் நடத்துவதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் அந்த நாய்களை, அவர்களை நடத்துவதற்காகப் பயிற்சி கொடுப்பார்கள். முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா. 62அவனுடைய அன்பான மனைவி வியாதிப்பட்டாள். அவர்களெல்லாரும் அவன் மரித்துபோகப் போகிறாள் என்று நினைத்தனர். ஆகையினால், அவன் இரவு நேரத்தில் அவனுடைய வீட்டின் சுவற்றைத் தொட்டுக் கொண்டே வெளியே கர்த்தரிடத்தில் சென்றான். வயல்வெளியில் முழங்காற்படியிட்டு தேவனே, தேவனே, நீர் மட்டும் என்னுடைய மனைவியை அவளுடைய ஜீவனை காப்பாற்றினால், நாளைக்கு என்னுடைய ஆட்டுக்குட்டியை உமக்குப் பலியாக செலுத்துவேன் என்றான். அந்த நாட்களில் அவர்கள் ஜனங்களை நடத்திக் கொண்டுபோகும்படியாய் ஆடுகளைப் பழக்குவிப்பார்கள். ஆக, அவனை வழிநடத்திச் சுற்றிக் கொண்டுப்போகும்படியாய் அவனிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது... கர்த்தாவே, நீர் என்னுடைய மனைவியை சுகப்படுத்தினால், அப்பொழுது என்னுடைய ஆட்டுக்குட்டியை நாளைக்கு உமக்கு பலியாகச் செலுத்துவேன் என்று கூறினான். அவனுடைய மனைவி சுகமானான். 63அடுத்த நாள் அவன் தேவாலயத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். பிரதான ஆசாரியனாகிய காய்பா அங்கே வெளியே நின்றுகொண்டு குருடனான பர்த்திமேயுவே, நீ எங்கே போகின்றாய் என்றான். அதற்கு அவன், ஓ, பிரதான ஆசாரியரே! நான் தேவாலயம் மட்டுமாய்ப் போய் என்னுடைய ஆட்டுக்குட்டியை பலியாகக் கொடுக்கப்போகிறேன். நான் கர்த்தரிடத்தில், நீர் என்னுடைய மனைவியை சொஸ்தப்படுத்தினால், என்னுடைய ஆட்டுக்குட்டியை உமக்குப் பலி செலுத்துவேன் என்று அவருக்கு வாக்களித்திருந்தேன் என்று கூறினான். அதற்கு ஆசாரியன், உன்னால் அந்த ஆட்டுக் குட்டியைக் கொடுத்துவிட முடியாது. பர்த்திமேயுவே, ஏனென்றால் அந்த ஆட்டுக்குட்டிதான் உன்னுடைய கண்களாய் இருக்கிறது. நான் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன், அங்கே விற்கிறவர்களிடத்தில் உனக்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கிக்கொள் என்றான். ஆனால் பர்த்திமேயுவோ, ஓ, பிரதான ஆசாரியரே! நான் ஒரு ஆட்டுக்குட்டியை வாக்களிக்கவில்லை. நான் இந்த ஆட்டுக்குட்டியைத்தான் வாக்களித்திருக்கிறேன் என்று கூறினான். ஓ, என்னே ! 64அந்தவிதமான வாக்கை ஏதாவது அளித்திருக் கின்றீர்களா என்று வியக்கிறேன். நீங்கள் எல்லாவற்றிற்கும் போதுமான ஆட்டுக்குட்டியைக் கண்டால், கர்த்தாவே, நீர் நான் சுகமடையும்படி செய்வீரானால், நான் உம்மையே சேவிப்பேன் என்று உமக்கு வாக்களிக்கிறேன். என்னால் முடிந்த எல்லாவற் றையும் நான் செய்வேன். என்னுடைய குழந்தையை நீர் உயிரோடிருக்கும்படி நீர் செய்வீரானால் அல்லது உன்னுடைய தாயாரை அல்லது உன் தகப்பனை அல்லது நீ சிநேகிக் கின்றவர்களை, கல்லறையில் வைக்கும் போது நீ அங்கே நின்று கொண்டிருந்தால், ஓ, தேவனே நான் அவர்களை சந்திப்பேன். நான், அவர்களை மீண்டும் சந்திப்பேன் என்று சிந்தியுங்கள். நீங்கள் உண்மையாகவே அப்படி கருதுகிறீர்களா! என்று வியக்கின்றேன். நீங்கள் வாக்களித்ததை நிறைவேற்றாமலேயே உங்களுடைய ஈஸ்டர் வந்துப்போக போகின்றதோ என நான் வியக்கின்றேன். 65அவன் போய் அவன் ஆட்டுக் குட்டியைப் பலி செலுத்தினான். யாரோ ஒருவர் அவனை வழிநடத்த அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். எனவே அவனிடத்தில் திரும்பி வரும்பொழுது, பர்த்திமேயு நீ அதைச் செய்யக்கூடாது என்றான். அவனுடைய ஆட்டுக்குட்டியை கொண்டுபோக வந்த ஆசாரியன். அவனிடத் தில் நீ இதைக் கொடுக்கக் கூடாது. இந்த ஆட்டுக்குட்டியை பலி செலுத்தக் கூடாது. குருடனான பர்த்திமேயு அந்த ஆட்டுக்குட்டி உனக்கு கண்கள் என்று உனக்குத் தெரியாதா என்றான். அதற்கு பர்த்திமேயு, ஆம் எனக்குத் தெரியும். ஆனால், நான் தேவனுக்கு வாக்களித்து விட்டேனே! பர்த்திமேயுவின் குருடான கண்களுக்கு ஆட்டுக்குட்டியை அளிப்பார் என்றான். 66அதற்குப் பின் அதிக நாட்கள் கடந்தல்ல, ஒருநாள் அவன் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த போது, அவனுக்கு ஒரு சத்தம் கேட்டது, குருடனான பர்த்திமேயுவின் கண்களுக்காக தேவன் ஒரு ஆட்டுக்குட்டியை அளித்திருந்தார். அவன் வீதி வழியாய் வந்துக்கொண்டிருந்தான், அவன் இந்த சத்தமெல்லாம் என்ன என்று கேட்டான். அவர் இருக்கின்ற இடத்திலெல்லாம் எப்பொழுதுமே அந்த சத்தம் இருக்குமென்றால், இந்த சத்தமெல்லாம் என்ன என்று அவன் கேட்டான். அதற்கு ஒருவன் நாசரேத்து ஊரானாகிய இயேசு என்னும் ஒருவர் கடந்து போகிறார் என்றான். அவனுடைய மேலங்கி எங்கே விழுகிறது என்று கூட அவன் கவனிக்காமல், அதைத் தூக்கி எறிந்தான். அப்பொழுது அதைக்குறித்து அக்கறை கொள்ளவில்லை. தேவன் ஒரு ஆட்டுக் குட்டியை அளித்திருந்தார். அவர் நேராக அந்த ஆட்டுக்குட்டி யிடம் சென்றான். ஓ, இயேசுவே, தாவீதின் குமாரனே என்மேல் இரக்கமாயிரும், என்மேல் இரக்கமாயிரும் என்று கூறினான். தீர்க்கதரிசியிடம், ராஜாவிடம் நெருங்கிப் போவதற்காக அங்கே இருந்த ஐசுவரியவான்களும் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்களும், “சும்மா இரு, அவருக்கு கேட்காது என்றார்கள். அவனோ, அதற்கும் அதிகமாக சத்தமிட்டான். அவர்களில் சிலர் அற்புதங்களின் நாட்கள் கடந்துபோய்விட்டது, அந்த நாட்களை போன்றதான காரியமே கிடையாது என்றனர். அவனோ, தாவீதின் குமாரனே! என்மேல் இரக்கமாயிரும், என்மேல் இரக்கமாயிரும், என்று இன்னும் உரக்க கத்தினான். தேவன் ஆட்டுக்குட்டியை அளித்திருந்தார். 67குருடனான பர்த்திமேயுவின் கண்களுக்காக அளித்த அதே ஆட்டுக்குட்டியை, அவர் உனக்காக அளித்திருக்கிறார். 1900 சில வருடங்களுக்கு முன்பாக இதே தினத்தன்று அவர் கொல்கதா மலையின் மேல் ஏறி தம்மையே பலியாக காயப் பட்டவராகவும், நொறுக்கப்பட்டவராகவும் ஒப்புக்கொடுத்தார். கவனியுங்கள் நண்பர்களே! நினைவிருக்கட்டும். ஆபேல் அவனுடைய மந்தைக்குள்ளாகச் சென்று அவனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து பலி செலுத்தும் பாறையின் மேல் கொன்றான். பிறகு (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இதை நன்றாகப் புரிந்து கொள்வது நலம். அவனுடைய ஆட்டுக்குட்டி மரித்த அதே பாறையின் மேல் ஆபேலும் மரித்தான். உனக்காக மரிக்க இன்றிரவு சித்தமாயிருக்கிறாயா! உன்னைப் பற்றின எல்லா சிந்தனைகளுக்கும் நீ மரித்துப்போக நீ சித்தமாயிருக்கிறாயா? அந்த பாறையின் மேல் உங்களுடைய ஆட்டுக்குட்டியோடு வந்து மரியுங்கள். ஓ, தேவனே என்மேல் இரக்கமாயிரும் என்று கூறுங்கள். பெருமையைக் குறித்து நிற்கின்ற ஆண்களையும், பெண்களையும் தங்களுடைய ஜீவியங்களை காரியங்களுக்குக் கொடுக்கிற ஆண்களையும், பெண்களையும் பற்றி நான் நினைக்கும் போது, வயது சென்றவர்களும் கூட அவர்களுடைய உத்தியோகத்தையும் அவர்களுடைய கௌரவத்தையும், அவர்களுடைய அயலகத்து வத்தையும் அல்லது அதைப் போன்ற காரியங்களையும் குறித்து நினைக்கிறார்கள். ஓ, ஏன் நீங்கள் ஊர்ந்து கொண்டு கல்வாரிக்கு இன்றிரவு ஏன் போகக்கூடாது? உங்களுடைய சொந்த ஜீவியமே, துண்டிக்கு மட்டுமாக அவரோடு கூட சிலுவையில் மரிக்கட்டும். எனக்காக காலங்களாக இருக்கின்ற பிளவுண்ட பாறையின் மேல். உம்முடைய கரங்களைப் போட்டு, உமக்குள்ளாக மறைந்து கொள்ளும்படியாகச் செய்யும். அருகிலுள்ள பழைய தண்ணீர்கள் உருண்டோட புயலானது இன்னும் மும்முரமாக இருக்க என்னை ஒளித்துக்கொள்ளும். ஓ, என் இரட்சகரே மறைத்துக்கொள்ளும். உலகமானது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், வேத சாதுரியர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அவர்களுடைய வேதாந்தம் எனக்கு வேண்டாம். எனக்கு என்ன வேண்டுமென்றால் இயேசுகிறிஸ்து என் இதயத்தில் இருக்க வேண்டும். என்னுடைய ஆட்டுக்குட்டியோடு நான் மரிக்கட்டும். 68அந்த இரவன்று அங்கே இருக்கின்ற அந்த கறுப்பினத்தவர்கள் ஊழியத்தண்டைக்கு நான் நடந்து போகும் போது அங்கே இருக்கின்ற எல்லா வெள்ளையர்களும் நின்றுகொண்டு அதோ அவன் கறுப்பினத்தவர்களின் ஊழியத் தண்டைக்குப் போகிறான் என்று கூறினபோது, அது எவ்வளவு கடினமாயிருந்தது என்று எனக்குத் தெரியும். அவ்வளவு கடினமானது என்னிலிருந்த அந்த எல்லா கென்டக்கி பெருமையுடன், அங்கே நான் அதைப் போன்று நடந்து சென்றேன். ஆனால், தேவனோ உனக்கு அது தேவையென்றால் நேராக அங்கே உள்ளே நடந்து செல் என்றார், நான் நேராக உள்ளே நடந்து சென்று பீடத்தண்டை முழங்கால் படியிட்டேன். நான் அங்கேயே அந்த ஆட்டுக்குட்டியுடன் இருபது வருடங்களுக்கு முன்பாக இருந்த பிரன்ஹாமாகிய என்னுடைய சுயத்திற்கு மரிக்குமட்டாய்க் கிடந்தேன். அல்லேலூயா!. நான் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் நான் பிழைத்திருக்கிறேன் நானல்ல ஆனால் கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். என்றோ ஒருநாள் அந்த மகிமையான உயிர்த்தெழுதலிலே அவர் வரும்பொழுது அக்கரையிலே என்னுடைய சரீரமானது ஒருக்கால் புல்களுக்கு அடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கும். ஆனால் அது சம்பவிக்கும் பொழுது, அந்தப் புல் அசைகிறதை நீங்கள் காண்பீர்கள். நான் அவருடைய மகத்தான மகிமையின் சாயலிலே அநேகரோடு கூட எழும்பி வருவேன். அல்லேலூயா! ஏனென்றால் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்திருக்கிறேன். இன்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் அதைத்தான் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நகர்ந்து கொண்டே நேராக கொல்கொதாவிற்கு இன்றிரவு செல்லுங்கள். இப்பொழுது நாம் ஒரு சிறு பயணம் செல்வோம். சகோதரியே, உம்மண்டை தேவனே என்ற பாடலுக்கு ஒரு ஸ்வரத்தைக் கொடுப்பீரா! அது ஒரு அடக்கம் என்று நீங்கள் கூறலாம். சகோதரனே நமக்கு அடக்கம் தேவை என்ற ஒரு நேரம் இருக்க வேண்டுமானால் சரியாக அது இப்பொழுதேதான். அப்பொழுது மனிதர்கள் அவர்களுக்காகவும் தங்கள் பெருமைக்காகவும் மரிப்பார்கள். அவள் நமக்கு ஒரு ஸ்வரத்தைக் கொடுக்கையிலே இப்பொழுது நாம் நிசப்தமாக நாம் தலைகளை வணங்குவோமாக. 69ஓ, தேவனே அக்கரையிலே என்ன நடந்தது என்பதை நான் சிந்திக்கையிலே, யோசிப்பதற்கு என்னுடைய எலும்புகளும் கூட நடுங்குகின்றன. அவர்கள் அந்த ஆட்டுக்குட்டியை அவர்கள் கொலை செய்து அவருடைய தலையில் முள்முடி சூட்டி, அதை உள்ளே அழுத்தினார்கள். சேவகர்கள் அவருடைய முகத்திலே துப்பி, ஓ, ராஜாவே அதைக் குறித்து இப்பொழுது ஏதாவது செய்யும் என்றார்கள். அவர் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசியாக இருந்தார். அவருடைய முகத்தின் மேல் ஒரு கந்தை துணியைச் சுற்றி அவருடைய தலையில் கோலால் அடித்து, இப்பொழுது, இப்பொழுது தீர்க்கதரிசனம் உரைத்து உன்னை அடித்தது யார் என்று சொல் என்றார்கள். ஆனால் தீர்க்கதரிசியோ, அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் என்று கூறினான். அவன் அதைக் கூறினான். அவருடைய கரங்களைத் தூக்கி பின்னாக கட்டினார்கள் தூரத்தில் போய் ஒரு மகத்தான சாட்டையோடு நின்று கொண்டு அவருடைய விலா எலும்புகள் அவருடைய முதுகு பக்கமாக வெளியே தெரியுமளவு வரைக்கும், அதனால் அவரை அடித் தார்கள். இரத்தம் அவருடைய பக்கவாட்டில் ஓடி பூமியின் மேல் சொட்டினது. அவர் இப்பொழுது நடக்கின்ற சத்தம் கேட்கிறது. அவருடைய பாதரட்சைகளிலிருந்து இரத்தம் நசுக்கப்படும் சத்தம் கேட்கிறது. அது இம்மானுவேலாயிருந்தது. அது தேவனா யிருந்தது. தேவனுடைய இரத்தமாயிருந்தது. 70அவர்கள் அந்த சிலுவையை அந்த கரகரப்பான கரடுமுரடான பழைய சிலுவையை எடுத்து அவருடைய முதுகின் மேல் வைக்கிறதை நான் காண்கிறேன். அதோ அவர் போகிறார். அந்த புண்ணாகிய முதுகின் மேல் கிடத்தியவாறு வீதியின் ஊடாக அவர் சென்றார். ஊளையிடும் கூட்டம் சிரித்துக் கொண்டு அவரைப் பார்த்து கேலி செய்து கொண்டிருந்தது. அதோ போகிறான், அந்த தீர்க்கதரிசி, அதோ போகிறான் அந்த மகத்தான போதகர், அதோ போகிறான் அந்த தெய்வீக சுகமளிப்பவன் என்று. ஆனால், அவர் என்னுடைய கர்த்தர். ஓ , தேவனே நான் அவரோடு ஏறும்படியாய் செய்யும். அங்கே மலையில் ஏறுகிறார், என்னால் அந்த அரை ஆடை உடுத்தின வாலிப ஸ்திரீகள் சுற்றிக் கொண்டு, அவரைப் பரிகாசம் செய்கிறதைக் காணமுடிகிறது. அவர்களுடைய ஆண் சிநேகிதர்களை ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு மலையின் மேல் ஏறுகின்றனர், சகோதரன் வாட் அது அதிகமாக இன்னும் மாறிப்போகவில்லை. மகத்தான சபை அங்கத்தினர்கள், “பாருங்கள். நம்முடைய சபையை இடித்துப் போடப் போவதாகக் கூறினவன் அவன்தான். நம்முடைய போதகருக்கு எதிராக பிரசங்கித்தவன், இப்பொழுது அவனைப் பாருங்கள் என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. ஆனால், தீர்க்கதரிசியோ அந்த வண்ணமாகத் தான் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டய்யாய் இருக்கிறார்” என்று கூறினார். 71அவருடைய தலையை அவர் திருப்புகையில், அவர் தாடியிலிருந்து எச்சில் வடிகிறதை என்னால் காணமுடிகிறது. கண்களை உருட்டி வானத்தைப் பார்க்கிறார், முனங்குகிறார். சற்று முன்னேறுகிறார். கர்த்தாவே, விசுவாசத்தைக் கொண்டு நான் இப்பொழுது அவரோடு நடக்க விரும்புகிறேன். அவருடைய முதுகில் தட்டி, கர்த்தாவே, நான் இங்கு நிற்பேன், என்ன செய்யவேண்டும் என்று சொல்லும், நான் அதைச் செய்வேன். எவ்வளவாய் நான் உம்மைப் பாராட்டுகிறேன். கர்த்தாவே என்று கூறவிரும்புகிறேன். தூரமான மலையில் அவரை அவர்கள் கீழே கிடத்தின்போது அவருடைய விலையேறப்பெற்ற கரங்களைப் பின்னாக இழுத்தார்கள். ஜூரத்தை நீக்கச் செய்த அந்தக் கரங்கள், அந்த ஏழை விதவையின் மகனைத் தூக்கிக் கொண்டு போகும்போது அவனுடைய நெற்றியை அல்லது சவப்பெட்டியில் அவனைத் தொட அவன் ஜீவனோடு வந்தான். தொற்காளை மீண்டும் ஜீவனோடிருக்க அழைத்த அந்த ஒருவர், யவீருவின் குமாரத்தியை ஜீவனோடிருக்க அழைத்த எழுப்பின அந்த ஒருவர், லாசருவே வெளியே வா என்று சொன்ன அந்த ஒருவர், அந்த உதடுகள் இப்பொழுது இரத்தம் கசிந்து கொண்டு வறண்டுபோய் அழுது கொண்டிருக்கிறது. 72அந்த மகத்தான கொடூர ஆணிகள் அவருடைய கரங்களுக்குள்ளும், கால்களுக்குள்ளும் கடாவப்பட்டன. என் கைகளையும், கால்களையும் உருவக் குத்தினார்கள் என்று தீர்க்கதரிசி அது சம்பவிப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்னரே கூறினான். அது என்ன அது ஆபேலின் ஆட்டுக்குட்டி அங்கே அவரை அவர்கள் கீழே தரையிலே தள்ளினார்கள். மாம்சம் பிளந்தது, அவருடைய நலிந்த சரீரம் நடுங்கினது. தாகமாயிருக்கிறது என்றார், அவர்கள் அவருக்கு குடிக்கக் காடியைக் கொடுத்தார்கள். அவர்கள் அவரை கேலியும் பரிகாசமும் செய்து மகத்தான அற்புதம் செய்கிறவனே, இப்பொழுது அதைக்குறித்து ஏதாவது செய் என்றனர். ஆனால் அந்த நேரத்தில் ஆகாயம் இருட்டத் தொடங்கினது, மின்னல்கள் பிரகாசிக்க துவங்கின, தேவன் தம்முடைய முகத்தை மறைத்துக் கொண்டார். அதற்கு மேல் அவரால் சகிக்க முடியவில்லை . ஓ, தேவனே பாவம் எவ்வளவு கொடூரமானதாய் இருக்கவேண்டும். எவ்வளவு கொடூரம், எவ்வளவு கொடூரம். தேவனே தம்முடைய முகத்தை மூடிக்கொள்ளுமளவிற்கு அந்த விலையேறப்பெற்ற ஒருவரை அப்படிச் செய்ய வைத்தது. அவர் அப்பேர்பட்ட ஒரு கிரயத்தைச் செலுத்தினார். தூதர்கள் தங்கள் முகங்களை திரையிட்டுக் கொண்டு திருப்பிக் கொண்டு அவரோடு அழுதார்கள். சந்திரனும், நட்சத்திரங்களும் அதற்கு மேல் தொடர்ந்து போக முடியவில்லை. அவைகள் பிரகாசிக்க முடியவில்லை. அவைகளை சிருஷ்டித்த அந்த தேவனே, சிலுவையில் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய தலையை சாய்த்தார். 73அவர் அதைச் செய்வதற்கு முன்பாக அங்கே அவருடைய வஸ்திரத்தின் மேல் சீட்டுப்போட்டுக் கொண்டிருந் தவர்களைப் பார்த்து தீர்க்கதரிசி கூறினதை நிறைவேற்றுகிறதைக் கண்டார். பிதாவே அவர்களுக்கு மன்னியும், இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்றார். எல்லாம் அன்புக்குள்ளாய் இருந்தது. ஆபேலின் ஆட்டுக்குட்டி, தேவனால் அளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர். அங்கே அவர் நண்பர்கள் அற்றவராய் தேவனாலும் கூட கைவிடப்பட்டவராய் மரித்தார். தேவனும் அவருடைய சொந்த பிதாவும் அவரைக் கைவிட்டார். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இருப்பினும் நாம் சுற்றிக் கொண்டு போய் ஏதோ ஒன்றுமே நடக்காதது போன்று சிரிக்கிறோம், களியாட்டம் போடுகிறோம். ஓ, தேவனே அது அந்த இரத்தமாயிருக்கிறது. அங்கே தூரத்திலே வைத்திய சாலையிலே அவன் மரித்துக் கொண்டிருக் கிறான் என்று வைத்தியர்கள் கூறினது போன்று. அந்த இரத்தம்தான் என்னை சொஸ்தப்படுத்தினது. ஓ, சிறிய பழைய பாவி பையனாய் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தேன். என் பாவங்களை மன்னித்தது அந்த இரத்தம்தான். நான் ஜீவித்துக் கொண்டிருந்ததான சீர்கெட்ட ஸ்தலத்திலிருந்து என்னை வெளியே எடுத்து என்னைத் தூக்கி நிறுத்தி, உம்முடைய குமாரன் என்று என்னை ஆக்கினது அந்த இரத்தம்தான். ஓ, மரித்துக் கொண்டிருக் கும் ஆட்டுக்குட்டியானவரே உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தம், அது என்னை சிலுவையண்டையில் வைத்துக் கொள்ளும். 74அது என்னுடைய தரிசனமாய் இருக்கிறது. அதுதான் அக்கரையிலிருக்கிறது அன்பு. தேவனுடைய மகத்தான இருதயம் எல்லாமும் இங்கே கீழாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவரிடமாய் வருகின்ற யாவும் புறம்பே தள்ளப்படுவதில்லை. அவர்கள் எல்லாரும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். என்னிடத் தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. தேவனே இருக்கின்ற ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் இன்றிரவு அவர்களுடைய வீட்டிற்குச் சென்று அவர்களுடைய சிந்தையில் இதை வைத்து சிந்திப்பார்களாக. என்னே ஒருபலி, மீட்டுக்கொள்ள என்ன ஒரு கிரயம் செலுத்தப்பட்டது, தேவனே அதற்கு என்ன கிரயம் கொடுக்க வேண்டியதாயிற்று. நாம் எந்த கிரயத்தையும் செலுத்தவில்லை . தேவனுக்கு அதன் கிரயம் அவருடைய குமாரனாயிருந்தது. தேவனுக்கு மகத்தான கிரயத்தை செலுத்த வேண்டியதாயிற்று. அது கிறிஸ்துவுக்கு அவருடைய ஜீவன் கிரயமாயிற்று. சாரோனின் ரோஜா அவரே, ஆனால் அந்த ரோஜாவிலிருந்த வாசனையை வெளியே எடுக்க வேண்டு மானால், நீங்கள் அதை நன்றாக நசுக்கிப் பிழிய வேண்டியதா யிருக்கிறது. அவருடைய அழகான ஜீவியமானது அவர் முப்பத்து மூன்றரை வயது வாலிபனாய் இருந்தபோது, நாம் ஜீவிக்கும் படிக்காக நசுக்கப்பட்டது. என் தேவனே உம் அருகில் இருப்பேனாக. எனக்கு அருகாமையில் தங்கி இரும் கர்த்தாவே! நான் இந்தப் பாதையின் முடிவுக்கு வரும்போது என்னுடைய ஜீவன் முடிந்து கொண்டிருக்கிறது. கர்த்தாவே! எனக்காக மரித்த அவர்தாமே அவர் எனக்கு அருகில் வருவாராக. இங்கிருக்கிற ஒவ்வொரு வரும் அந்த வண்ணமாய் இருப்பார்களாக. 75நாளைக்கு கர்த்தாவே அல்லது நாளை மறுநாள் ஒரு சமயத்தில் இங்கே உட்கார்ந்து பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டு இருந்தவருமான ஒரு ஸ்திரீயை அடக்கம் பண்ணப்போகிறோம். அவளைக்குறித்து எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். அவள் வந்தாளேயானால் இரட்சிக்கப்படுவாள், வரவில்லையென்றால் தொலைந்து போனாள். ஓ, தேவனே இரக்கமாயிரும். ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும் இன்றிரவு இந்தக் கட்டிடத்தை விட்டுப் போகும்போது அவர்களுடைய வீடுகளுக்கு போகும் போது “என்னுடைய கரங்களில் ஒன்றுமில்லை, உம்முடைய சிலுவையில் மட்டுமே அது உள்ளது” என மும்முரமாக சிந்திப்பார்களாக. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த சிலுவையின் மேல் மரிப்பார்களாக. கர்த்தாவே இன்றிரவு இங்கே இந்த சிறிய பழைய காங்கிரிட் கட்டிடத்திலுள்ள இந்த பிரசங்க பீடத்தில் இருக்கும் பொழுது நான் என் ஜீவியத்தை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறேன். நீர் எனக்காக செய்துள்ளதற்காக நன்றி கூறுகிறேன். உம்முடைய சிலுவையில் அறையப்பட்டதின் நினைவு கூருதலான இந்த நேரத்தில் நான் என்னைப் புதியதாய் அர்ப்பணிக்கிறேன். என்னை எடும் கர்த்தாவே. என்னுடைய எல்லாத் தவறுகளையும், தொல்லைகளையும் எனக்கு மன்னியும். தேவனுடைய ஆவிக் குள்ளாக என்னை உறுதியாயும் வல்லமையாயும் ஆக்கி, கர்த்தாவே! அதனால் நான் ஆத்துமாக்களை ஜெயிக்கும்படியாய் செய்யும். இங்கு குழுமியுள்ளோரை ஆசீர்வதியும். ஏனென்றால் நாங்கள் அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஒவ்வொரு பாவியையும் மன்னியும். பின் வாங்கிப்போன ஒவ்வொரு வரையும் திரும்பவுமாக இழுத்துக்கொள்ளும். 76நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தியவாறு இருக்கையிலே இப்பொழுது இங்கே இருக்கின்ற ஒவ்வொரு பாவியான ஆணும், பெண்ணும் சிறு பையன்களும், சிறுமிகளும் நீங்கள் எல்லோரும் வாலிபமானவர்களும் அங்கே பின்னால் இருக்கின்றவர்கள், உங்களிடத்தில் அன்றொரு இரவு சற்று கடினமாக பேசினேன். நான் அதைச் செய்ய வெறுக்கிறேன். தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் பிரன்ஹாம் கடூரமாக இருக்கிறார் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் எங்கேயிருந்து துவங்கினீர்களோ, நான் அங்கே உட்கார்ந் திருக்கிறேன். அது என்னவென்று எனக்குத் தெரியும். பாருங்கள். நீங்கள் நம்முடைய கர்த்தரை நேசியாமல் போய்விடுவீர்களோ என்ற காரணத்தினால்தான் நான் அதைக் கூறினேன். இது உங்களுக்கு அர்ப்பணிப்பின் நேரமாக இருக்கும்படியாக ஜெபியுங்கள். தாய்மார்களும், தகப்பன்மார்களும், மூத்தவர் களுமாகிய ஜனங்களில் உங்களில் சிலர் இதை உங்களை அர்ப்பணிக்கும் நேரமாய் ஆக்குங்கள். இப்பொழுது அதைச் செய்வீர்களா. அவரை உங்களுடைய இருதயத்திலே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய முழு ஆத்துமாவோடும் அவரை விசுவாசியுங்கள்.) இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கி இருக்கையிலே ஜெபத்தில் நினைவு கூரவேண்டுமென்றிருக் கிறவர்கள் யாராவது இருக்கிறீர்களா! அப்படி விரும்பினால் உங்கள் கரத்தை உயர்த்தி சகோதரன் பிரன்ஹாம் என்னை நினைவு கூருங்கள், தேவனை நெருங்கின வளர்ந்திட விரும்புகிறேன் என்று கூறுங்கள், சரி. டஜன் கணக்கான கரங்கள். 77பிதாவே, இவர்கள் எல்லாரையும் நினைவுகூரும். நீர் இதை அளிக்கும்படியாய் ஜெபிக்கிறேன். அவர்கள் சமாதானமுடையவர்களாய் இருப்பார்களாக. எங்களுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி கொட்ட என்னுடையதும் பிரசங்க பீடத்தில் கொட்டுகிறது. சகோதரன் அங்கே இருக்கிறவர், எனக்கு முன்பாக இங்கே உட்கார்ந்திருப்பவர், அவருடைய சுருக்கம் விழுந்த கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எங்களை ஏற்றுக்கொள்ளும் கர்த்தாவே. இந்த தெய்வீக பிரசன்னத்தில் எங்கள் ஒவ்வொருவரையும் மன்னிப்பீராக. அன்புள்ள தேவனே, இன்றிரவு வாலிபமாயும், வயதாயுமிருக்கிற எங்களைக் கர்த்தாவே மன்னியும். அந்த நாளிலே நாங்கள் இரட்சிக்கப்பட்டு, உம்முடைய ராஜ்ஜியத்திற்குள்ளாக எடுத்துக்கொள்ளப்படு வோமாக. அவருடைய நாமத்தில் கேட்கிறோம், ஆமென். நீங்கள் அமைதியாய் காலூன்றி நில்லுங்கள் உங்கள் தலைகள் தாழ்த்தியவாறு இருக்கட்டும். (சகோதரன் பிரன்ஹாம் அமைதியாக ஜனங்களுக்காக ஜெபிக்கிறார் - ஆசி) தேவனே, என் தேவனே, என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர், வாரும் கர்த்தாவே, இந்த இதயங்களை ஆசீர்வதியும். (சகோதரன். பிரன்ஹாம் தொடர்ந்து ஜனங்களோடு கூட ஜெபிக்கிறார்). 78நீங்கள் பயபக்தியாய் யாரிடமும் பேசாமல் ஒரு வார்த்தை கூட பேசாமல், அப்படியே கூட்டத்தை விட்டு அமைதியாக உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். அப்படியே திரும்பி இப்பொழுது உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். ஒரு வார்த்தையும் பேசாமல் அப்படியே திரும்பி வெளியே செல்லுங்கள். தேவன் உங்களோடு இருப்பாராக. (சபையார் அமைதியாக கட்டிடத்தை விட்டு வெளியேற ஆரம்பிக்கும் வேளையில், ஆர்கன் வாசிப்பவர்களும், பியானோ வாசிப்ப வர்களும் 'உம்மண்டை தேவனே' என்ற பாடலைத் தொடர்ந்து பாட சகோதரன் பிரன்ஹாம் பாடிக்கொண்டிருக்கிறார். நாமெல்லாரும் ஆடுகளைப் போல வழித்தப்பிப் போனோம். கர்த்தரோ, நம்மெல்லோருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். நம்முடைய மீறுதல்கள் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. நாமோ அவர் தேவனால் அடிக்கப்பட்டு வாதிக்கப்பட்டு சிறுமைப்பட்டவர் என்று எண்ணினோம். (சகோதரன். பிரன்ஹாம் தொடர்ந்து அமைதியாக ஜனங்களோடு கூட ஜெபிக்கிறார் ஆர்கன் வாசிப்பவர்களும், பியானோ வாசிப்பவர்களும் தொடர்ந்து உம்மண்டை தேவனே பாடலுக்கு இசை இசைக்கிறார்கள்)….